நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வு – 2019

By   18/12/2018

நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான அனைவருக்கும் வணக்கம்.

நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வை ஜனவரி 1 அன்று எப்போதும் போல சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கஜா புயலின் தாக்கத்தால் 8 மாவட்டங்களில் பெரும் இழப்பை அனைத்துத் தரப்பும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் நம்மாழ்வாரின் நினைவு நாளைக் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் வருகை இன்றி பெரிய நிகழ்வாக நடத்தாமல் எளிய நினைவஞ்சலியாகக் காலை 10 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படுகின்ற புயல், மெரும் மழை, வறட்சி ஆகியவை நமக்கு புதிய புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை, குறிப்பாக விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்திட செய்ய வேண்டியவை குறித்தும்

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இது போன்ற புயல்களாலும், பெரும் மழையாலும் கடற்கரை மாவட்டங்களும், காவிரிப் பாசனப் பரப்பும் பருவநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படாதிருக்க விவசாய முறைகளில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்தும்

உள்மாவட்டங்கள் அடிக்கடி சந்திக்கும் வறட்சியை தாக்குப் பிடிக்கும் விவசாயம் குறித்தும்
ஆழமாகக் கலந்துரையாடி பல்லாயிரம் ஆண்டுக்காலம் விவசாயத்தால் சிறப்பான வாழ்வு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் வேளாண் வாழ்வினை, வேளாண் சூழலை பருவநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் ஒன்றாக மாற்றிடுவதற்கான அறிவுச் சூழல், செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளோம்

பருவ நிலை மாற்றக் காலத்திற்கேற்ற தற்சார்புள்ள இயற்கையோடு இணைந்த மாற்று வாழ் முறை நாம் மீண்டும் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே இந்தமுறை ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளில் மேற்கண்ட விடயங்களில் உள்ள கூறுகளை ஆய்வு செய்யும் பொருட்டு நண்பர்கள் அனைவரும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து அந்தக் கலந்துரையாடலின் முடிவுகளை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் ஆகவே அனைவரும் இந்த நினைவஞ்சலி நிகழ்வில் அனைவரும் எப்பொழுதும் போல அஞ்சலி செலுத்திவிட்டு கலந்துரையாடலில் பங்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடன் இருக்கிறோம் என்ற உணர்வையும், தங்களின் வாழ்வை மீட்டுவாக்கம் செய்யத் தமிழகம் உடன் இருக்கிறது என்ற நம்பிக்கையையும் விதைப்போம்.

வாருங்கள் நண்பர்களே, நம்மாழ்வார்களாக உருமாற, தமிழகத்தின் வேளாண்மையை மீட்டுருவாக்கம் செய்ய.

குறிப்பு – நிகழ்வு மிக எளிமையானதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற் எதிர்கால வேளாண்மை, வாழ்வியல் குறித்த கலந்துரையாடலில் பங்களிப்பு அளிக்க உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். தங்கள் வருகை குறித்த முன் தகவலை வரவேற்கிறோம். நிகழ்வு மதிய உணவு வரை மட்டுமே. நினைவிடத்தில் 10 மணிக்கு அஞ்சலி. பின் மதியம் உணவு வரை கலந்துரையாடல்.

வானகம்
அறங்காவலர் குழு

தொடர்புக்கு : 94459 68500, 99442 36236, 88258 10072