Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

About Vanagam

தமிழ்

Mission

  • Poison Free Food
  • Medication without Medicine
  • Barrier-Less Schools

In Nammalvar's words, Vanagam is motherland for the people who are discriminated by society in the name of any bifurcation and also for those came out from the mainstream due to pressure given by so called development activities and pseudo-science.

Activities

  • To uplift the rain fed farmers, research was done on millets, pulses and other rain fed crops, proper training has been given to them, not only in production, post production training like value addition also given to them
  • With the help of NABARD (Govt Organisation) free training and corpus fund for farmers given to them for a period of two years.
  • Introducing permaculture, Bio-Dynamic agriculture and various indigenous techniques to farmers and upcoming generation
  • Heirloom Seed collection and sharing
  • Bridging seed saver and farmers to share knowledge and seeds
  • Training on indigenous medicine practice
  • Irrigation and water management research and sharing those data with farmers
  • Native breed cattle research and knowledge sharing
  • Thirty plus ponds and water reservoirs were created from 2009 to till date, which recharges the ground water level, in surumanpatti village vanagam is the source for potable water for neighborhood families.
  • People of Tamilnadu celebrated Nammalvar's birthday as “Seed Day” during that day vanagam introduces four people serving in farming, seed saving and environmental activities, they were awarded in the name of Nammalvar with cash reward, (people's contribution to vanagam is added in nammalvar award fund).

வானகத்தை பற்றி

English

இயற்கை வழி வேளாண்மை - வாழ்வியலுக்கான அராய்ச்சி மற்றும் பயிற்சிக்கூடம்.

இலக்குகள்

  • நஞ்சில்லா உணவு
  • மருந்தில்லா மருத்துவம்
  • சுவரில்லா கல்வி

குறிகோள்கள் மற்றும் செயற்பாடுகள்

  • நிலையான மற்றும் பாதுகாப்பான வேளாண் முறைகளை நாடெங்கும் உள்ள உழவர்களுக்கு பயிற்சியளிப்பது
  • மானாவரி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர சிறுதானிய உற்பத்தியை பரவலாக்குவது.
  • நிரந்தர வேளாண்மைக்கான (permaculture) பண்ணை வடிவமைப்பு குறித்த ஆய்வுகள் மற்றும் பயிற்சிகள்.
  • மரபு மருத்துவமும் வாழ்வியலும் குறித்த அராய்ச்சி மற்றும் பயிற்சிகள்.
  • வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் பயிற்சிகள்
  • வானகம் பதிப்பகம் - வேளாண்மை, மருத்துவம் மற்றும் கல்விக்கான புத்தகங்களை உருவாக்கவது,
  • வானகம் (இருமாத இதழ்), வானகம் குழு உருவாக்கிய தாய்மண் புத்தகம் வேளாண் கல்லூரிகளில் பாடத்திட்டமாகவே அமைகிறது.
  • மரபு விதைகளை மீட்டெடுத்தல் மற்றும் நாட்டு ரக கால்நடைகளை பேணுதல்.
  • தொடர்ச்சியாக மாதம் இரண்டு இயற்கை வழி வேளாண்மை அறிமுகப் பயிற்சி (முதல் மற்றும் மூன்றாவது வாரம் வெள்ளி சனி ஞாயிறு)
  • இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஐந்து நாள் விரிவான வாழ்வியல் பயிற்சி.
  • வேளாண் பயிற்றுனர்களுக்கான பயிற்சி.
  • மூன்று மற்றும் ஆறு மாத வேளாண்மை பயிற்சி.
  • குழந்தைகளுக்கான விடுமுறை நாட்களில் வாழ்வியல் பயிற்சிகள் (சிலம்பம், நாட்டுபுற கலை இலக்கியம் உள்ளிட்ட பயிற்சி)
  • சித்தம், தொடுசிகிச்சை, ஹோமியோபதி பயிற்சிகள்.
  • தற்சார்பு வாழ்வியலுக்கான பண்ணை வடிவமைப்புகளை ஆராய்ந்து, பயிற்சியில் பங்கு பெறுபவர்களை செயல் வழியில் கற்க வழி செய்தல்.
  • மானாவரி விவசாயம் மூலம் சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை உற்பத்தி செய்தல்
  • நிலத்தடி நீர் சேமிப்புக்காக முப்பதுக்கும் மேற்பட்ட சிறு குளங்களை உருவாக்கியுள்ளோம் இதன் விளைவாக, குடிப்பதற்கு ஏதுவாய் இல்லாமல் கிடந்த இந்த பகுதியில் வானகத்தில் எடுக்கும் நீர்
  • குடுப்பதற்கு ஏற்ற போல மாறி இருக்கிறது, சுற்றியுள்ள மக்கள் வானகத்தை குடிநீருக்கான ஆதராமாக பயன்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சி.
  • ஐயாவின் பிறந்தநாள் (ஏப்ரல் 6) அன்று மரபு விதை கண்காட்சி மற்றும் பரவலாக்கம்.
  • ஏப்ரல் 6 அன்று வேளாண்மை, சுற்றுச்சூழல் சார்ந்து சிறப்பாக வேலை செய்யும் நான்கு நபர்களுக்கு தொகையுடன் கூடிய நம்மாழ்வார் விருது. (மக்கள் பங்களிப்போடு நபர் ஒருவருக்கு 10000 வழங்கப்படுகிறது).
  • மரபு விதைக் காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கௌரவித்து மக்களுக்கு அறிமுகம் செய்வதம் மூலம், விதை பரவலாக்கம்