நம்மாழ்வார் ஐயாவின் 86வது பிறந்தநாள் & மரபு விதைநாள் விழா:**
#நம்மாழ்வார் ஐயாவின் 86வது பிறந்தநாள் & மரபு விதைநாள் விழா:
”மடி விதையைவிட
பிடி விதையே முந்தி முளைக்கும்”
#நம்மாழ்வார்
#விதை உழவனின் சொத்து குறிப்பாக பெண்களின் சொத்து, ஏனென்றால் விதைத் தேர்வு முதல், அறுவடை முடியும் வரை பெண்களின் பங்கு தான் இந்த சமூகத்திற்கு பசிப்பினியை போக்கி வருகிறது, பன்நெடுங்காலமாக விதைகளை கட்டிக்காத்த பெருமை நம் தாய்மார்களையே சாரும், விதை தான் அனைத்திற்கும் ஆதாரம்.
அந்த விதை என்பது நிலத்தில் விதைப்பது மட்டுமல்ல. நல்ல வாழ்வியல் கருத்துக்களை ஐயாவின் பிறந்தநாள் போன்ற சமூகங்கள் கூடும் நன்னாளில், ஒவ்வொருவரின் மனதிலும் விதைப்பதும் விதை தான்.
ஏப்ரல் 6, 2024 சனிக்கிழமை சிறப்பான நிகழ்வாக அமைந்தது. தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் உழவர்கள் தங்கள் நிலங்களின் விளைந்த உணவையும், விதையையும் படைத்தனர். மேலும் இளைஞர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஐயா நம்மாழ்வாரின் நினைவுகளோடு நிகழ்வு தொடங்கியது.
#மரபு_விதைக்கண்காட்சி :
*2014ம்மாண்டு முதல் #வானகம் மரபு விதைகளை பரவலாக்கம் செய்யும் நோக்கில் வேலை செய்யும் முன்னோடி உழவர்களோடு கரம்கோர்த்து அவ்விதைகளை காட்சிப்படுத்தவும், பரவலாக்கவும், அவ்விதை குறித்தான அனுபவங்களை சமூகத்திற்குப் பகிரும் வேலைகளையும் செய்துவருகிறது.
இந்தாண்டும் மரபு தானியங்கள், நெல்வகைகள், காய்கறிகள், கிழங்குகள், மூலிகைகள் என பலதரப்பட்ட விதைகளின் தகவல்களை முன்னோடி உழவர்கள் அனைவருக்கும் காட்சிப்படுத்தி, கைமாற்றிக் கொடுத்தனர்.
மேலும் வானகம் பண்ணையில் இயற்கை வழியில் விளைந்த உணவுப் பொருட்களும், வானகத்தில் பயிற்சி பெற்று சிறப்பாக வேளாண்மை செய்து வருபவர்களின் மதிப்புக்கூட்டுப் பொருட்களும், கைவினைப் பொருட்களும், ஐயாவின் புத்தகங்களும் காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் திரு.ரமேஷ் தாக்கல் செய்தார்.
மக்கள் பங்களிப்புடன் கூடிய
#வாழ்நாள்_சாதனையாளர்_விருது & #நம்மாழ்வார்_விருதுகள் :
இன்றைய #இயற்கை_வேளாண்மை சமூகம் தெளிவு பெற தொடக்கப்புள்ளியாகவும், முன்னெத்தி ஏராகவும், மண்புழு போல் வெளியே தெரியாமல் தொடர்ந்து செயலாற்றி வருபவரும், #நம்மாழ்வார் ஐயாவின் சகா, குரு, நண்பருமான ஆரோவில் Pebble Garden திரு பெர்னாட் டிகிளர்க் அவர்களுக்கு #வாழ்நாள்_சாதனையாளர்_விருது வழங்கப்பட்டது.
மேலும் #பெர்னார்ட் அவர்கள் நம்மாழ்வாருடனான நட்பையும், அனுபவங்களையும், சமூகத்திற்கு தான் கொடுக்க வேண்டிய கருத்துரையையும் பகிர்ந்தார்கள்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு #பழங்குடி மக்கள் சங்கம், ஈரோடு திரு. V.P. #குணசேகரன், . அவர்கள் இச்சூழலில் சமூகத்திற்குத் தேவையான வழிகாட்டலையும், தன் அனுபவங்களையும் சிறப்பாக முன்வைத்தார்கள்.
வழக்கம் போல் இந்த #2024ஆண்டும் சமூகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கான #நம்மாழ்வார் விருதுகளை #இயற்கை வேளாண்மையில் திரு. ஈ.செந்தில்குமரன், செஞ்சோலை பண்ணை, கோவை. அவர்களுக்கும்,
#கொரானா பெரும் தொற்று காலத்தில் சித்த மருத்துவத்தின் முலம் ஆயிரக்கணக்கானவர்களை மீண்டு வர செய்த சென்னை, மனப்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் K.வீரபாபு B. S.M. S அவர்களுக்கு #மருத்துவத்திற்கான #நம்மாழ்வார்_விருது வழங்கப்பட்டது.
#கரூர் மாவட்டத்தில் வானகம் அமைந்துள்ள பகுதியை சார்ந்த இடையப்பட்டி கிராமத்து அரசு நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் திரு ப. பொன்னுசாமி அவர்கள், தன் மாணவர்களுக்கு பாடத்திடத்திற்கும் அப்பால் வாழுதலுக்கான ஞானம் போதிக்கும் அவர் பணியை பாராட்டி... கல்விக்கான #நம்மாழ்வார்_விருது வழங்கப்பட்டது.
பின்னர் துவண்டு கிடக்கும் #ஏரி, கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு உயிர்கொடுத்து வேளாண்மையையும், கிராமத்து வாழ்வியலையும் சிறக்க களப்பணியாற்றிவருபவர்களான புதுக்கோட்டை. #கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்திற்கு #சுற்றுச்சூழலுக்கான_நம்மாழ்வார்_விருது வழங்கப்பட்டது.
விருதாளர்கள் அனைவருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் தங்களின் வாழ்வியல் அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்தார்கள்.
மரபு கலைகளின் கொண்டாட்டம் :
மண்ணின் மரபுக் கலைகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஈரோடு கலைத்தாய் அறக்கட்டளை குழுவினரும், உள்ளூர் பறையிசைக் கலைஞர்களின் கலைநிகழ்வும் நடைபெற்றது. மேலும் உள்ளூர் இடையப்பட்டி அரசுப் பள்ளியின் மாணவர்களின் சூழலியல் பேச்சுக்கள், விடுகதை, விளையாட்டுக்கள் என இளம்தலைமுறையினரை அடையாளைம் கண்டு அவர்களுக்கும் வாய்ப்பளித்து
அடுத்தகட்ட தளபதிகளை சமூகத்திற்கு காட்டியும் கொண்டாட்டம் நீண்டது.
மேலும் நிகழ்வுக்கு வந்தவர்கள் நம்மாழ்வார் ஐயா வாழ்ந்த எளிய வாழ்வியலையும், வானகம் பண்ணையும் பார்வையிட்டு இதுபோன்று சூழலுக்கு கேடில்லா வாழ்வியல் வாழ விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் காலை உணவாக நம்மண்ணின் நெடுங்கால உணவான கம்பங்கூழும், மதியம் சிறுதானிய உணவுகளையும் அங்கப்பன் ஐயா & சாரதி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சூழலுக்கு கேடில்லா மட்கும் பொருட்களைக் கொண்டு அழகிய மேடை வடிவமைப்பை திரு.அனந்தப்பொருமாள் குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்விற்காக கடும் வெயிலையும் தாண்டி களப்பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும், வானகத்தின் பணியாளர்களுக்கும், நிகழ்விற்கு வருகை புரிந்தவர்களுக்கும், நன்கொடையளித்த தொண்டுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்…
#வானகம் “ நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்”.
தொடர்புக்கு :
+91 8668098495
+91 8668098492
+91 9445879292
அனைவரையும் அன்போடு வானகம் அழைத்து மகிழ்கிறது.
*வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app