மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி
##வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி
#நாள் : 7-2-2025 முதல் 9-2-2025 வரை
**“1960க்கு முன்பு உலகம் முழுவதும் இருந்தது Agriculture. 1960க்கு பின்பு உலகம் முழுவதும் இருப்பது Agri-Business ”.**
**”Agri Business" என்பது
Export oriented மற்றும் Import dependent.** இந்நாட்டிலுள்ள மண்ணைப்பற்றி கவலையில்லை. மாட்டைப்பற்றி கவலையில்லை. மக்களைப் பற்றி கவலையில்லை. அதற்குப் பெயர் தான் Development.
இனியேனும் நம்மை மறுபரிசீலனை செய்வோம்.
நம்மாழ்வாரின் நோக்கங்கிறது...
என்னை(நம்மாழ்வார்) மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்.
வானகம் நடத்தும்
இப் பயிற்சியில் :
⚫ இயற்கை வழி வேளாண்மை
⚫ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
⚫ மழை நீர் அறுவடை
⚫ உயிர்வேலி
⚫ ஒருங்கிணைந்த பண்ணை
⚫ இடுபொருள் செய்முறை பயிற்சி
⚫ களப்பயிற்சி
⚫ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
⚫ கால்நடை பராமரிப்பு
⚫ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
⚫ மரபு விளையாட்டு
- ஆகியவை இடம்பெறும்.
⇒ பயிற்சி வருகிற
7.2.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கி
9.2.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)
பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,500/- (non-refundable)
தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.
⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்._**
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
- +91 86680 98495
- +91 86680 98492
- +91 94458 79292
குறிப்பு :
- வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
⚫ பாலித்தின் பைகள்
⚫ சோப்பு
⚫ ஷாம்பு
⚫ பேஸ்ட்
⚫ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,
வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,
கை விளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.