நம்மாழ்வார் அய்யாவின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
*#நம்மாழ்வார் அய்யாவின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு :
நேற்று ஜனவரி 1, 2025 காலை 10 மணிக்கு திருமதி மீனா பால சஞ்சீவி (நம்மாழ்வார் மகள்) அவர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வினை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மற்ற வானகம் அறங்காவலர்கள் மகேஷ் மெல்வின், மருதம் குமார், ஏங்கல்ஸ் ராஜா, ரமேஷ், வெற்றிமாறன், அஜய் ராஜா, கரிகாலன், கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக திரு ப. தி.ராஜேந்திரன் #கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் அவர்கள் " இயற்கை விவசாயத்தில் முன்மாதிரியாக இயங்கும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டு இயக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் உலகிற்கு நல்ல முன்மாதிரியாக இயங்க முடியும் என்பதை வலியுறுத்தினார் " மற்றும் திரு க. சரவணன் #நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு, அவர்கள் " விவசாயிகள் விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு நியாய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
#தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகள் மூலமாக அந்தந்த வட்டாரங்களில் விளைவிக்கப்படும் இயற்கை விவசாய சிறுதானிய உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்ய முன் வர வேண்டும்." என்றும் கூறினார்.
மேலும் நிகழ்வில் மரபு விதைகள், உணவுப் பொருட்கள், கைத்தறி உடை, என மதிப்புக்கூட்டப்பட்ட தற்சார்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறு தானிய கூழ், குதிராவாலி காய்கறி பிரியாணி, வரகு தயிர் சோறு போன்ற மண்ணின் உணவுகள் கொடுக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்வின் சிறப்பாக இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியலுக்கான தங்களது ஐயங்களை கேட்டு தெளிவுபட்டனர்.
நம்மாழ்வார் ஐயாவின் என்ணங்களையும், சிந்தனைகளையும் அனைவரும் கூடி செயலாக்குவோம்.
நன்றி..