Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

*#நம்மாழ்வார் ஐயாவின்* *11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு :*

*#நம்மாழ்வார் ஐயாவின்* *11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு :*

#நம்மாழ்வார் ஐயாவின்
11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு :
#வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவுகளோடு ஐயோடு பயணித்தவர்களின் அனுபவ உரைகளோடு, இயற்கை வழி வேளாண்மை, மரபு விதைகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், சூழலியல் செயல்பாடுகள் என பல செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமான முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள், நண்பர்கள், களப்பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மக்களுக்கான பணியை செய்து வருகிறோம்.

அதன்படி வருகிற #ஜனவரி1, 2025ல் 11ம் ஆண்டு #நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு வானகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்கள் :
இந்நிகழ்வுக்காக நம்மாழ்வார் ஐயாவோடு பயணித்தவர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் சேகரிப்பு மையத்தின் திரு. ராஜேந்திரன் ஐயா அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் குழுக்களாக இணைந்து இயற்கை வேளாண்மை, மரபு விதைகள் சேகரிப்பு, சந்தை, பயிற்சிகள் என மிகச்சிறப்பான பல பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதுபோலவே திரு. க. சரவணன் அவர்கள் பெரம்பலூர், நன்னை பகுதியில் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு என்கிற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி, உள்ளூர் பெண்களை ஒருங்கிணைத்து சிறுதானிய சாகுபடி, மதிப்புகூட்டல், விதைப் பகிர்வு, பயிற்சிகள் உட்பட பல பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

பண்ணை பார்வையிடல் :
#வானகம் அமைந்துள்ள நிலமான எதற்கும் பயன்படாது என பலராலும் புறக்கணிக்கப்பட்ட மோசமான மண்ணரிப்பால் கரடுமுரடாகி, பாறையும், சுண்ணாம்புமாக இருந்த நிலமாகும் . அந்த நிலத்தை திருத்தி, வளமாக்கி, இந்த நிலத்திலும் எல்லா வகையான உணவையும், காடுகளையும் உருவாக்கிட முடியும். கால்நடைகளும், மனிதர்களும், பல்லுயிர்களும் இணைந்து வாழ்ந்திட முடியும் என்பதை நம்மாழ்வார் ஐயாவும், உடன் உழைத்த தன்னார்வலர்களும் இச்சமூகத்திற்கு மாதிரியாக வழிகாட்டிய இடமாகும். மேலும் இப்படிப்பட்ட நிலமும் வளமாக முடியுமானால், எப்படிப்பட்ட நிலத்தையும் வளமாக்கிட முடியும் என்கிற நம்பிக்கையை நம்மாழ்வார் ஐயா எல்லோருக்கும் விதைத்து சென்றுள்ளார்.

இதற்காக என்னென்ன வடிவமைப்புகள், திட்டமிடல்கள், தொழில்நுட்பங்கள் உட்பட அனுபவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், இந்த வறட்சியான நீர்ப்பற்றாக்குறையான பகுதிகளில் கூட மண்ணுக்கேற்ற மரபு நெல்ரகங்கள், தானியங்கள் , நீர்சேமிப்புகள், உயிர்வேலி, மரங்கள், கால்நடைகள் போன்ற பலவும் எவ்வாறு சாத்தியமாகியுள்ளது என்பதை அறிய மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்நிகழ்வில் “ பண்ணை பார்வையிடலும் & விளக்கமும் “ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல் :


=> நினைவஞ்சலி
=> சிறப்புரை
=> அனுபவப் பகிர்வு
=> பண்ணை பார்வையிடல்
=> மரபு கலை நிகழ்ச்சி
=> விதை கண்காட்சி
=> சிறுதானிய உணவு (மதிய உணவு)
=> பண்ணை விளைபொருட்கள் விற்பனை
=> நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனை

*நிகழ்வு நாள் : 1-1-2025, புதன்கிழமை*

நேரம் : காலை 9மணி முதல் மாலை 4மணி வரை

நிகழ்விடம் :
*#வானகம் – #நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,*
சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்-621311.
https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

தொடர்புக்கு :
+91 96260 92408, 94423 99395, 9445879292

*வானகம் சார்ந்த பல்வேறு நலப்பணி நிகழ்வுக்கான உணவு, கட்டுமானம், நூலகம், பராமாரிப்புப் பணிகள், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பல செயல்பாடுகளில் தாங்களும் பங்களிக்க, விரும்பும் தொகையை, இந்த வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த தகவலை எங்களுக்கு ( நன்கொடை என்பதை குறிப்பிட்டு ) WhatsApp / Email மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கான வரிவிலக்க ரசீதும் கொடுக்கப்படும்.*

*#Nammalvar Ecological Foundation*
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu

மேலும் விபரங்களுக்கு:
+9194458 79292 , 86680 98492, 86680 98495
info@vanagam.org

#வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app
நன்றி.