Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

15நாள் #இயற்கை_வேளாண்மை களப்பயிற்சி

15நாள் #இயற்கை_வேளாண்மை களப்பயிற்சி



#வானகம் நடத்தும் 15நாள் #இயற்கை_வேளாண்மை களப்பயிற்சி:

நாள் : 14-10-24 முதல் 28-10-24 வரை



”உயிரியல் பன்மயமே பசி போக்கும் ”

கோ. நம்மாழ்வார்

( ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை புத்தகத்திலிருந்து )



உலகில் உள்ள உயிர்கள் செடிகொடி மரங்களிலிருந்து தனது உணவைப் பெறுகின்றன. இறைச்சி உண்ணும் விலங்குகளும், தாவரம் உண்ணும் விலங்குகளையே உணவாக கொண்டுள்ளன. மொத்தத்தில் செடிகொடி மரங்களே உயிர் வாழ்க்கை அடிப்படையாகும்.



உலகில் உணவாகக் கொள்வதற்கு 75 ஆயிரம் வகை செடிகொடி மரங்கள் உள்ளன. அவற்றில் ஏழாயிரம் வகை செடிகள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.



இன்று நாம் உண்ணும் உணவில் 90 விழுக்காடு 103 வகை செடிகொடி மர வகைகளிலிருந்து மட்டுமே கிடைக் கின்றன. இந்தியாவில் 583 செடிகொடி மரங்கள் பயிரிடப் படுகின்றன. 7,500 மருந்து செடிகள் உள்ளன. 3,900 உணவிற்கும் பிற பயன்பாட்டிற்கும் உரிய செடிகளே காணப்படுகின்றன.



பசுமைப் புரட்சியின் விளைவால் தேவைக்கு உற்பத்தி செய்வதற்கு மாறாக வணிகத்திற்கான உற்பத்தியாக மாற்றப்பட்டுவிட்டது. இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள், ஒட்டு விதைகள், களைக்கொல்லிகள் புகுத்தப்பட்டது. அதிக தண்ணீர் செலவிடப்பட்டது.



வெளி இடுபொருளை பயன்படுத்தியதால் சாகுபடி செலவு அதிகரித்தது. உழவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வணிகப் பயிர்களை உற்பத்தி செய்தனர். நெல்லும் கோதுமையும் கூட விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்டது.



இதன் விளைவால் இன்று நிலம் தரிசாக கிடக்கிறது. மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மீள நாம் மறுபடியும் பசி போக்கும் உயிரியல் பன்மயமான “ இயற்கை வழி வேளாண்மையை “ நோக்கி நகர வேண்டும்.



இதனை உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் இயற்கை வேளாண்மையை அனைவரும் கற்கும் வண்ணம் எளிய முறையில் பயிற்சிகளாக கற்றுக் கொடுத்தார்கள்.



அதன் தொடர்ச்சியாக “ #வானகம்(நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் ) “ தொடர் பயிற்சிகளை அளித்துவருகிறது.



இப் பயிற்சியில் : ⇒ பாரம்பரிய நெல் நாற்றங்கால் தயார் செய்தல், விதை தேர்வு செய்தல், விதை நேர்த்தி செய்தல், விதைப்பு முறைகள் ⇒ ஆண்டு முழுவதற்குமான காய்கறி மற்றும் கீரை சாகுபடிகள் ⇒ நிரந்தர வேளாண்மை ⇒ வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் ⇒ ஏர் உழவு ⇒ கால்நடை வளர்ப்பு , தேனீ வளப்பு ⇒ பூச்சிகள் & களை மேலாண்மை ⇒ வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு முறை ஆகியவை இடம்பெறும்.



வெளிப்பண்ணைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படும்.

இப்பயிற்சி 2024 #அக்டோபர் 14 முதல் அக்டோபர் 28 வரை நடைபெறுகிறது".".





பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.



⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

ஐந்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.

⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்._**





முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,

கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app