Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

வானகத்தில் மரபு நெல் பகிர்வு :

வானகத்தில் மரபு நெல் பகிர்வு :


வானகத்தில் மரபு நெல் பகிர்வு :

நம் மண்ணின் #மரபு நெல் ரகங்களை மீட்டு " உழவர் விதை, உழவரின் கையிலே" இருக்க வேண்டும் என்கிற நோக்கில் #நம்மாழ்வார் ஐயா முன்னோடி உழவர்களோடு கரம் கோர்த்தார்.

அதன் விளைவாக இன்று நாடு முழுவதும் மண்ணின் மரபு நெல் ரகங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டும் , பரவலாக்கப்பட்டும் வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வானகமும் அந்த விதைப் பகிர்வுப் பணியை தொடர்ந்து செய்துவருகிறது.

#வானகம் போன்ற நிலங்களில் வேளாண்மையே சாத்தியமில்லை என்று வானகம் தொடக்க காலத்தில் முன்னோடி உழவர்கள் உட்பட பலரும் கூறி வந்தனார்

ஆனால் நம்மாழ்வார் ஐயா கூறியது " இதுபோன்ற நிலத்திலே வேளாண்மை சாத்தியமானல், எந்த நிலத்தையும் வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும் என்பதை செய்து கண்ணில் காட்டுனும் என்பார்"

அப்படி வானகத்தில் மானவாரி தானியங்கள் தொடங்கி, காய்கறிகள், கீரைகள், மரங்கள், மூலிகைகள் என எல்லாவற்றையும் உற்பத்தி செய்து காட்டினார்.

அதற்கு பல பல மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், வரப்பு, அகழிகள் என பல மழைநீர் அறுவடை தொழில்நுட்பத்தை வானகத்தில் பயன்படுத்தினார்.

இதன் விளைவால் கடந்த 5 ஆண்டுகளாக வானகத்தில். மரபு நெல் ரகங்களும் சாகுபடி செய்யும் சூழல் உருவாகிவிட்டது.

விதைப்பு , நடவு, அறுவடை என பல பணிகளையும் பயிற்சிகாக அனைவருக்க்கும் களப்பயிற்சியாக கற்றும் வருகின்றனர்.

இந்தாண்டு கூடுதலாக பல நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு, கையால் அறுவடையும் நடைபெற்றது

மேலும் இந்த நெல் ரகங்களை முறையாக விதைத் தேர்வும், பராமரிப்பும் செய்து வைத்துள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் வானகத்தில் விளைந்த விதைகளை தேவைக்கு கூடுதலாக உள்ளவற்றை பகிர்வதும் வழக்கம்.

அதன்படி 2024, இந்தாண்டு தேவைக்கு கூடுதலாக கீழ்கண்ட வயதுள்ள மரபு நெல் ரகங்கள் பகிர தயாராக உள்ளது. அவை

  1. தூய மல்லி 130நாட்கள்

  2. கருப்பு கவுணி 145-150நாட்கள்

  3. குழிவெடிச்சான் 110நாட்கள்

  4. கருடன் சம்பா 150-160நாட்கள்

  5. சீரகசம்பா -120நாட்கள்

  6. கிச்சலி சம்பா 135-140நாட்கள்

  7. கள்ளி மடையான் 145நாட்கள்

  8. காட்டுயானம் 170-180 நாட்கள்

    இந்த பட்டியலில் உள்ள ரகங்கள் மட்டும் பகிரத் தயார்நிலையில் உள்ளது. சாகுபடிக்கான காலம், பயிரிடும் முறை உட்ப பல தொழில்நுட்பம் சார்ந்த தகவலையும் அறிந்து கொண்டு பயிர்செய்ய விரும்பினால் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

    வாய்ப்பில்லாதவர்களுக்கு அஞ்சலில் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    #மரபு நெல் ரக விதைப் பகிர்வு தொடர்புக்கு :

    #வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், கடவூர், கரூர்.

    கைபேசி :

    +91 96260 92408,

    +91 94423 99395

    மரபு ரகங்களை பரவலாக்கும் இப்பணியில் அனைவரும் கைகோர்த்து நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல மண்ணையும், சூழலையும், விதையையும்.கைமாற்றிக் கொடுப்போம்.

    #இயற்கை வேளாண்மை & வாழ்வியல் சார்ந்த அனுபவங்களை அடிப்படை முதல் விரிவான அனுபவங்கள் வரை கற்றுக் கொள்ள வானகத்தில் மூன்று பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த மாதத்திற்கான பயிற்சி 13-9-24 வெள்ளிக்கிழமை தொடங்கி 15-9-24 ஞாயிறு வரை நடைபெறும்.

    நன்கொடை : ரூ.2,500/.

    #முன்பதிவு : +91 94458 79292 +91 86680 98495 +91 94423 99395

    https://vanagam.org https://vanagam.page.link/app
    நன்றி.