உயிராற்றல் வேளாண்மை அறிமுக பயிற்சி “
இந்திய பயோ டைனமிக் அசோசியேஷன்
மற்றும் வானகம் ”நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்” நடத்தும்
“உயிராற்றல் வேளாண்மை அறிமுக பயிற்சி “ (Bio dynamic Agriculture)
நாள்: 24 - 8 - 24 சனி & 25 - 8 - 24 ஞாயிறு வரை
உழவர்களை இரசாயன வேளாண்மையிலிருந்து , கேடில்லா இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்த்த #நம்மாழ்வார் ஐயா அவர்கள் நீடித்து நிலைக்கக் கூடிய எளிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல வேளாண்மைமுறைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அவற்றில் ஒன்று தான் “ உயிராற்றல் வேளாண்மை முறை”. இதன்மூலம் பிரபஞ்ச ஆற்றலையும், மட்கும் கழிவுகளையும், பல்லுயிர் சூழலையும் பயன்படுத்தி உழவர்கள் நிலைத்த வேளாண்மையை எளிமையாக செய்யமுடியும்.
இதனை உணர்ந்த #வானகம் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) வருகிற
ஆகஸ்ட் 24, 2024 சனி காலை 10மணி முதல்
ஆகஸ்ட் 25, 2024 ஞாயிறு மாலை 5மணி வரை அடிப்படை உயிராற்றல் வேளாண்மை பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது..
இப்பயிற்சியில்
- உயிராற்றல் வேளாண்மை அறிமுகம்.
- உயிர்சக்தி நாட்காட்டியை பயன்படுத்தும் முறை
- பயிர் பாதுகாப்பு முறைகள்
-
உற்பத்தி பொருட்களுக்கான சான்றிதழ் விவரம்
போன்ற உயிராற்றல் வேளாண்மை தொடர்பான முன்னோடிகளின் அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம்.
பயிற்றுநர்கள் :
திரு. ஜெய்சன் ஜெ ஜெரோம்
& திரு. மகேஷ் மெல்வின்&
திரு. பெ.அன்பழகன்
#உயிர்சக்தி வேளாண் வல்லுநர்கள்.
⇒ நிகழ்விடம் :
*“#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,*
சுருமான்பட்டி, கடவூர் - 621311,
கரூர் மாவட்டம் (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19 )
*⇒ நன்கொடை : ரூ. 1,800/- (non-refundable)* *தங்குமிடம், மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.
*நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்* Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277 IFSC Code : IOBA0001371 Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம். *✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.*
*✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :* • +91 86680 98495 • +9186680 98492 • +9194458 79292 • +9196550 36131
**_குறிப்பு :_** - வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
⚫ பாலித்தின் பைகள்
⚫ சோப்பு
⚫ ஷாம்பு
⚫ பேஸ்ட்
⚫ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,
வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,
கை விளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.