” கரூர் இயற்கை வேளாண் திருவிழா 2024 “
#வானகம் முன்னின்று நடத்தும்
” கரூர் இயற்கை வேளாண் திருவிழா 2024 “
#நம்மாழ்வார் ஐயா அவர்கள் நாடுமுழுவதும் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி ஓய்யாது பயணங்களும், பயிற்சிகளும் அளித்து வந்தது அனைவரும் அறிந்ததே...
அதன் விளைவால் நாடுமுழுவதும் இயற்கை வேளாண்மையும், வாழ்வியலும் பெருகியது. அவற்றை ஒத்த சிந்தனையாளர்களோடு கரம்கோர்த்து விதைத் திருவிழா, மாநாடுகள், நிகழ்வுகள், பயிற்சிகள் என தொடர்ந்து விரிவுபடுத்தி வந்தார்.
இந்நிலையில் இவ்வாழ்வியல் முறையில் வெற்றியடைந்த அனுபவங்களையும், செயல்பாட்டாளர்களையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் வேலையை #வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) தொடர்ந்து செய்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக #வானகம், #கரூர் இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு, #JCI கரூர் டைமண்ட் & Young Indians ஆகிய அமைப்ப்புகளை ஒன்றிணைத்து ”இயற்கை வேளாண் திருவிழா 2024 “ ஏற்பாடு செய்துள்ளது.
#நாள் : 21 - 07 - 2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : கொங்கு திருமண மன்றம் ,
கோவை ரோடு, கரூர்.
நிகழ்வில்
1500 பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு
300 க்கு மேற்பட்ட காய்கறி, பழ வகைகள் விதைகள் காட்சி
15க்கும் மேற்பட்ட துறைசார் வல்லுனர்கள் சிறப்புரை
NO BOIL, NO OIL மற்றும் சிறுதானிய உணவு வகைகள் காட்சி மற்றும் செய்முறை வகுப்பு
100- மேற்பட்ட இயற்கை அங்காடிகள் இடம் பெறும்.
அனைவருக்கும் மதிய சிறுதானிய உணவு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
தொடர்புக்கு :
+91 97891 44999 M.N.பெரியசாமி -
+91 96260 92408 வானகம் ரமேஷ்
+91 96987 99222 JCசூரியகுமார்
+91 97884 42477 JC நாகராஜன்
+91 98436 3600 Yi.கார்த்தி
அனைவரும் வருக...
நன்றி...