ஒரு நாள் சிறப்பு ” இயற்கை வேளாண்மை பயிற்சி “
மார்ச்17 சிவகாசியில்
”#வானகம்” நடத்தும்
ஒரு நாள் சிறப்பு
” இயற்கை வேளாண்மை பயிற்சி “
#நம்மாழ்வார் நோக்கங்கிறது :
#உணவு உற்பத்தியில் பெரும்பகுதி சத்துமிகு தானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்கள் மானாவரி வேளாண்மையை சார்ந்தவர்களே. புழுதியிலும் புழுதியாய் வாழும் அவர்களை ஒருபடி உயர்த்துவதே என் பணி என்கிற நோக்கில் செயல்பட்டு வந்தவர் தான் நம்மாழ்வார் ஐயா அவர்கள்.
மேலும் நாளைய தமிழக வேளாண்மையை வழி நடத்துவதில் மானாவாரி உழவர்களின் பங்கு பெரிதாக இருக்கும். பருவ நிலை மாற்றத்தின் பாதிப்பு, தமிழகத்தின் பெரும் நிலப்பகுதியை மானாவாரியாக சாகுபடியை நோக்கி நகர்த்திவிடும். மழையற்ற பகுதி அதிகமாகியிருக்கும். இந்த நிலையில் இன்றைய பாசனப் பகுதி விவசாயிகள் பாடம் கற்க வேண்டிய இடமாக மானாவாரிப் பகுதி இருக்கும். தங்களுடைய வேளாண்மையை மரங்களுடன் கூடிய திட்டமிட்ட வேளாண்மையாக மாற்றிய மானாவாரி உழவர்களின் நிலங்கள், ஏனைய உழவர்களுக்கு கல்லூரியாக இருக்கும் என்று நம்மாழ்வார் ஐயா கூறுவார்கள்.
அதன் அடிப்படையில் தமிழகத்தின் பெரும்பகுதி மழையை மட்டுமே நம்பி சாகுபடி நடைபெறும் பகுதிதான் விருதுநகர் மாவட்டம். தண்ணீர் பாசனவசதி குறைவான இப்பகுதியை மையமாக் கொண்டு செயல்படும் அமைப்பு தான் “ #தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு “.
இவர்களின் பணியாக மானாவாரி வேளாண்மைக்காக பயிற்சியளித்தல், அதற்கான தானியங்கள் முதல் காய்கறிகள் வரை தேவையான விதைகளை உற்பத்தி செய்து பரவலாக்கம் செய்தல், நிலங்களில் மழை நீர் சேகரிப்பு, உயிர்வேலி ஏற்படுத்திக் கொடுத்தல். விளைந்த விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல் & பயிற்சியளித்தல்.
மேலும் உழவர்களே நேரடியாக தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து, நுகர்வோருக்கு நஞ்சில்லா பொருட்களை சந்தைப்படுத்த “ உள்ளூர் சந்தைகளை ஏற்படுத்துதல் ” என்கிற
#நம்மாழ்வார் ஐயா விருப்பத்தை 2014ம் ஆண்டு முதல் உழவர்களை ஒருங்கிணைத்து 10ஆண்டுகளாக ஞாயிறு தோறும் #தேன்கனி நேரடி வாரச் சந்தைகளையும் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள்போல் #நம்மாழ்வார் ஐயாவின் எண்ணத்தை விரிவாக பரவலாக்கும் செய்யும் நோக்கில் செயல்படும் உழவர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு “ வானகம்” அமைப்பானது அவர்களின் பண்ணைகளில் சிறப்பு #பயிற்சி அளித்து வருகிறது.
அதனடிப்படையில் வருகிற 2024, #மார்ச்17ல் சிவகாசியில் “#கீதா வாழ்வியல் மையத்தில்” தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பின் உழவர்களோடு ஒரு நாள் சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#இப்பயிற்சியில்
இயற்கை வேளாண்மையின் அடிப்படை தொடங்கி, இயற்கை இடுபொருட்கள், மானாவரி வேளாண்மை & காய்கறிகள் சாகுபடி, மரபு விதை உற்பத்தி, மதிப்புக்கூடல் முதல் சந்தைபடுத்துதல் வரையிலான அனுபவங்களையும் கற்றுக் கொள்ளலாம்.
பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
#பயிற்சி நாள் : 17-3-24
ஞாயிறு காலை 10மணி – மாலை 5மணி வரை
நிகழ்விடம் :
#தேன்கனி உழவர் கூட்டமைப்பு,
”#கீதா வாழ்வியல் மையம் “
பாறைப்பட்டி, சாத்தூர் சாலை, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
பயிற்சி நன்கொடை : ரூ. 500/-(non-refundable)
*மூலிகை தேநீர் & உணவு வழங்கப்படும்.
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
- +91 86680 98495
- +91 86680 98492
- +91 94458 79292
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :