Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

“ நிரந்தர வேளாண்மை”

“ நிரந்தர வேளாண்மை”

“ #வானகம் ” நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் “ #நபார்டு வங்கி ” இணைந்து நடத்தும்

“ நிரந்தர வேளாண்மை” & பண்ணையம் ஆவணப் படம் “

https://www.youtube.com/watch?v=kae3Kuvdnpg&t=539s

#நாகை மாவட்டத்தில் 100 உழவர்களுக்கு “ #நபார்டு வங்கியுடன் இணைந்து “ #நிரந்தர வேளாண்மை” திட்டத்தை கடந்த 2ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் இயற்கை வழி வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மழைநீர் சேமிப்புகள், மரபு விதை மீட்பு , இயற்கை உணவு மதிப்புக்கூட்டல், நாற்று உற்பத்தி, இடுபொருட்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் உட்பட பலதரபட்ட பணிகளை உழவர்களோடு இணைந்து செயல்பட்டுள்ளோம்.


இதன் விளைவாக பல்வேறு நிரந்தர வேளாண்மைக்கான மாதிரிப்பண்ணைகளும், பயிற்றுநர்களும் தயாராகி உள்ளனர். எனவே இந்த செயல்திட்டத்தின் விளைவாக பயனடைந்த பயணாளிகளின் அனுபவங்களை சிறு ஆவணப்படமாக காட்சிப்படுத்தியுள்ளோம்.

மேலும் நபார்டு நிதி உதவியுடன் பயனடந்தை இயற்கை வழி வேளாண் பயிற்றுநர்களின், மாதிரிப்பண்ணைகள் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கள அனுபவங்களை நேரில் சென்று பார்வையிட்டோ அல்லது கைபேசி வாயிலாகவோ கேட்டு பயணடைய கீழுள்ள விபரங்களை தொடர்பு கொள்ளவும்.

நாகை மாவட்டம் :


1. திரு.R.சிவாஜி, கருப்பம்புலம், தெற்கு வேதாரண்யம் வட்டம். தொடர்புக்கு : 9443414808.
பாரம்பரிய விதை நெல் உற்பத்தி மற்றும் விற்பனை. அரிசி வகைகள், அவல், எள், உளுந்து பயிறு வகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை.
2. திரு. V. தீன தயாளன்,
நடுத்தெரு உம்பளச்சேரி. வேதாரண்யம் வட்டம் கைபேசி : 9945894603.
உம்பளச்சேரி கால்நடை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு. பாரம்பரிய நெல் உற்பத்தி. விபூதி உற்பத்தி மற்றும் விற்பனை.
3. திரு. மு.வேதையன், சாஞ்சாடி தெரு நாலு வேதபதி, வேதாரண்யம் வட்டம். கைபேசி : 9655681155.
காய்கறிகள் நாற்று உற்பத்தி மற்றும் விற்பனை, நிலக்கடலை உற்பத்தி, இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, மண்புழு உரம் தேனீர் வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் விற்பனை.
4. திரு. G.ராமகிருஷ்ணன் அச்சுத நாராயண பிள்ளை சந்து நாகப்பட்டினம். கைபேசி : 9488015483.
மூலிகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை, மண்புழு உரம், பாரம்பரிய நெல் விவசாயம்.
5.திரு. S.மகேந்திரன், மடத்துக்காடு தென்னம்புலம் வேதாரணியம் வட்டம் கைபேசி : 9840283608.
நாட்டு ரக காய்கறிகள், நிலக்கடலை, பாரம்பரிய நெல், உற்பத்தி மற்றும் விற்பனை.
6. திரு. பா.குணசேகரன், மேலத்தெரு, வெள்ளப்பள்ளம். வேதாரண்யம் வட்டம். கைபேசி : 9843336127.
பழ மரங்கள், கொய்யா எலுமிச்சை மாதுளை சப்போட்டா மா முந்திரி விவசாயம், மற்றும் காய்கறிகள்.
7. திரு. கா.மாரியப்பன், மன்மதன் கோவில் தெரு, கோவில் பத்து, வேதாரண்யம் வட்டம்.
கைபேசி : : 9443678808 நிலக்கடலை காய்கறிகள் தென்னை மா சாகுபடி.
8. திரு. வே.முனியப்பன், கஞ்சமலை தெரு, புஷ்பவனம், வேதாரண்யம் வட்டம். கைபேசி : 9443622117
கீரைகள் காய்கறிகள் உற்பத்தி, மற்றும் சந்தைப்படுத்துதல், நிலக்கடலை, பாரம்பரிய நெல் விவசாயம்.
9. திரு. வீ.அன்பரசன், பெருமைக்கோன் காடு, பஞ்ச நதிக்குளம் நடுச்சத்தி, வேதாரண்யம் வட்டம், கைபேசி : 8870734408.
பாரம்பரிய நெல் உற்பத்தி மற்றும் விற்பனை, உளுந்து, பயறு, எள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால்நடை தீவனம் உற்பத்தி.
10. திரு. ஜெ.இரத்தின குமார். சந்தானம் தெரு தலைஞாயிறு கைபேசி : 98403336433
பாரம்பரிய நெல் காட்டுயானம் உற்பத்தி மற்றும் விதை நெல், அரிசி விற்பனை.
11.திரு. சு.பொன்னியின் செல்வன். வடக்குத்தெரு, ஆறுகட்டுறை, வேதாரண்யம் வட்டம். கைபேசி : 9385533327.
ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, பால் முட்டை இறைச்சி விற்பனை, மீன் அமிலம், பஞ்சகாவியம் உற்பத்தி மற்றும் விற்பனை.
12. திரு. ந.முத்துக்குமரன், கவுண்டர் தெரு, நாலுவேதபதி, வேதாரண்யம் வட்டம்.
கைபேசி : : 8838100403 நிலக்கடலை, தென்னை பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் விற்பனை.
13.திரு. K. வேதையன், ஆந்தகுடி, கீழ்வேளூர் வட்டம், கைபேசி : 8973734358.
பாரம்பரிய நெல் விவசாயம், பருத்தி எள் உளுந்து பயறு சாகுபடி. மீன் வளர்ப்பு.
14. திரு. ஞா.விவேகானந்தன், பாப்பா கோயில் நாகப்பட்டினம். கைபேசி : 9842464934.
பாரம்பரிய நெல் உற்பத்தி மற்றும் விதை நெல் அரிசி விற்பனை.
15.திரு. ப.கல்யாணசுந்தரம். காரைகுளம், வடக்கு பொய்கை நல்லூர் . கைபேசி : 6374277261 பாரம்பரிய நெல், கீரைகள் கிழங்கு வகைகள் , வெள்ளரி பரங்கி சுரை பீர்க்கன் உற்பத்தி மற்றும் விற்பனை விதைகள் சேகரிப்பு.
16.திரு. R. செல்லதுரை, பாக்கம் கோட்டூர், திருமருகல் வட்டம் , கைபேசி : 9442636276.
மரப்பயிர்கள் சாகுபடி. பாரம்பரிய நெல் மற்றும் பருத்தி சாகுபடி.
17. திரு. மா.அசோக் குமார், காரைக்குளம் வடக்கு பொய்கை நல்லூர், கைபேசி : 99 43 46 95 83.
ஒருங்கிணைந்த பண்ணையம், காய்கறிகள் கீரைகள், கருவிகளில் தொழில்நுட்பங்களை புகுத்தி பணிகளை எளிமையாக்குதல் மற்றும் விதைகள் சேகரிப்பு.
18.திரு. S.பரமசிவம், ஏனா நல்லூர், பாக்கம் கோட்டூர், கைபேசி : 99 96 02 52 42
மீன் வளர்ப்பு, பருத்தி மற்றும் நெல், உளுந்து, பயறு சாகுபடி.
19. திருமதி. மு.மாதவி மருதூர் வடக்கு வேதாரண்யம் வட்டம். கைபேசி : 94 86 27 73 46.
தேனி வளர்ப்பு மற்றும் விற்பனை, பாரம்பரிய நெல், காய்கறிகள் உற்பத்தி, அரிசி மற்றும் விதை நெல் விற்பனை. எள் உற்பத்தி மற்றும் எண்ணை விற்பனை.
20. திருமதி. ம.சித்ரா வடமழை மணக்காடு வேதாரணியம் வட்டம். கைபேசி : 85 24 06 68 50.
சிறுதானிய மதிப்பு கூட்டுதல் உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்தல், மூலிகை உற்பத்தி மற்றும் பயன்படுத்துதல்.
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org https://vanagam.page.link/app நன்றி..