நிரந்தர வேளாண்மைக்கான செயல் விளக்க நிகழ்ச்சி
#நிரந்தர #வேளாண்மைக்கான செயல் விளக்க நிகழ்ச்சி நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
#தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை வங்கி (#NABARD) நிதியுதவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிரந்தர வேளாண்மையை பரவலாக்கும் திட்டத்தை நம்மாழ்வாரின் வானகம் செயல்படுத்தியது.
கடந்த இரண்டாண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 உழவர்களுக்கு மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சியை வானகம் வழங்கியது. அவர்களில் இருபது நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனித்துவமான 16 பயிற்சிகள் வழங்கப்பட்டன.
https://www.youtube.com/watch?v=kae3Kuvdnpg&t=85s
இத்திட்டத்தின் கீழ் நபார்டு நிதியுதவியில் விதைகள், மரக்கன்றுகள், தேனீப் பெட்டி, சொட்டுநீர் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இயற்கை வேளாண்மை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. உயிர்வேலி, கோழி வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு, நெல், காய்கறி, பழ சாகுபடி முதலியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த பண்ணையமாக ஒவ்வொரு பண்ணையும் உருவாக்கப்பட்டது.
செய்த வேலையை மறுபடியும் செய்ய தேவையில்லாத தன்மையுடனும், உழவரின் குடும்பத்திற்கு தேவையான பலவகையான உணவை தருவதால் குடும்பமும் ஆரோக்கியத்தை பெறுகிறது.
இத்திட்டத்தை பெருவாரியான மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பொய்கை நல்லூரில் 16ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு #நாகப்பட்டினம் மாவட்ட #ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகிக்க கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். திட்ட விளக்கத்தை நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த் கண்ணா அளித்தார்.
இந்நிகழ்வில் #வானகம் அறக்கட்டளையின் அறங்காவலர்கள், வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், கால்நடைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், திட்டத்தின் பயனாளிகள் மற்றும் விவசாயிகள் என 500 பேர் கலந்து கொண்டனர்.
https://www.facebook.com/media/set/?vanity=vaanagam&set=a.946920763490966&cft[0]=AZWr6Q4XUyANkHfqWq7UrQjzlqgYanPRovdJbbjUGMhvBD4fjDfP80KDED6bqNv45XcbSbhOKNpUzzLbhWaT-h1bZkGtEuco9Cy3RzUHakDENxZlfCWutNY72hcLJ6m0SUkQ_MweUCaBGUhrQrUmffZUXTru3RVsj8GG82BPJf-ytUDnKrTdqTY0a7oBpPXxU6I&tn=-R
நன்றி.