Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

*“உயிராற்றல் வேளாண்மை பயிற்சி “

 *“உயிராற்றல் வேளாண்மை பயிற்சி “


இந்திய பயோ டைனமிக் அசோசியேஷன்
மற்றும் வானகம் ”நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்” நடத்தும்

“உயிராற்றல் வேளாண்மை பயிற்சி “ (Bio dynamic Agriculture)

உழவர்களை இரசாயன வேளாண்மையிலிருந்து , கேடில்லா இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்த்த #நம்மாழ்வார் ஐயா அவர்கள் நீடித்து நிலைக்கக் கூடிய எளிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல வேளாண்மைமுறைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அவற்றில் ஒன்று தான் “ உயிராற்றல் வேளாண்மை முறை”. இதன்மூலம் பிரபஞ்ச ஆற்றலையும், மட்கும் கழிவுகளையும், பல்லுயிர் சூழலையும் பயன்படுத்தி உழவர்கள் நிலைத்த வேளாண்மையை எளிமையாக செய்யமுடியும்.

இதனை உணர்ந்த #வானகம் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) வருகிற பிப்ரவரி 23, 2024 வெள்ளி காலை 10மணி முதல் பிப்ரவரி 25, 2024 ஞாயிறு மாலை 5மணி வரை விரிவான உயிராற்றல் வேளாண்மை பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயிற்சியில் கொம்பு சாண உரம், கொம்பு சிலிகா, சாண மூலிகை உரம், மூலிகை பூச்சி விரட்டி, உயிராற்றல் வேளாண் நாட்காட்டியை எப்படி பயன்படுத்துவது போன்றவை குறித்து விரிவாக கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்றுநர்கள் :


திரு. ஜேசன் ஜெ ஜெரோம்
& திரு. மகேஷ் மெல்வின்
#உயிர்சக்தி வேளாண் வல்லுநர்கள்.


⇒ நிகழ்விடம் :
*“#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,*
சுருமான்பட்டி, கடவூர் - 621311,
கரூர் மாவட்டம் (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19 )
*⇒ நன்கொடை : ரூ. 2,300/- (non-refundable)* *தங்குமிடம், மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.
*நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்* Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277 IFSC Code : IOBA0001371 Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

முன்பதிவு அவசியம். *✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.*
*✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :* • +91 86680 98495 • +9186680 98492 • +9194458 79292 • +9196550 36131

**_குறிப்பு :_** - வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,

கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app