*“ நிரந்தர வேளாண்மை”* ” கருத்தரங்கு & விதை கண்காட்சி ”
“ #வானகம் ” நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்
“ #நபார்டு வங்கி ” இணைந்து நடத்தும்
**
**
“ நிரந்தர வேளாண்மை”
செயலாக்க திட்டம் வெற்றி விழா & பண்ணையம்
” கருத்தரங்கு & விதை கண்காட்சி ” :
#நம்மாழ்வார் நோக்கங்கிறது..
சூழலுக்கு கேடில்லா, இரசாயனமில்லா இயற்கை வழி வேளாண்மை முறைகளையும், மரபு விதைகளையும், தொழில்நுட்பங்களையும், இயற்கை வாழ்வியல் முறைகளையும் மீட்டு தற்சார்போடு ஒவ்வொரு கிராமம் இருக்க வேண்டும்.
அப்போது தான் இந்திய இறையாண்மை காக்கப்படும். அதற்கு பன்முகத் தன்மையுடைய முன்னோடி அனுபவ உழவர்களையும் & பயிற்சியாளர்களையும் அடையாளம் காண வேண்டும். அவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி “ பகுதிக்கேற்ற வேளாண்மை முறைகளையும் & தொழில்நுட்பங்களையும் “ கைமாற்றிக் கொடுக்க வேண்டும்.
இதற்கான முயற்சியில் நம்மாழ்வாரும், வானகமும் தொடர்ந்து செயல்படும். அதற்காக ஒத்த சிந்தனையோடு செயல்படுபவர்களோடு கரம்கோர்த்து தொடந்து “ வானகம்” ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
அதன் அடிப்படையில் #நாகை மாவட்டத்தில் 100 உழவர்களுக்கு “ #நபார்டு வங்கியுடன் இணைந்து “ #நிரந்தர வேளாண்மை” திட்டத்தை கடந்த 2ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் இயற்கை வழி வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மழைநீர் சேமிப்புகள், மரபு விதை மீட்பு , இயற்கை உணவு மதிப்புக்கூட்டல், நாற்று உற்பத்தி, இடுபொருட்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் உட்பட பலதரபட்ட பணிகளை உழவர்களோடு இணைந்து செயல்பட்டுள்ளோம்.
இதன் விளைவாக பல்வேறு நிரந்தர வேளாண்மைக்கான மாதிரிப்பண்ணைகளும், பயிற்றுநர்களும் தயாராகி உள்ளனர். எனவே இந்த செயல்திட்டத்தின் வெற்றியை விழாவாக முன்னெடுத்து பலபகுதிகளுக்கும் ” நிரந்தர வேளாண்மை” திட்டத்தை பரவலாக்கம் செய்ய உள்ளோம்.
இதற்கான நிகழ்வில் பன்மயமான மாதிரிகளை அனுபவங்களாகவும், காட்சிகளாகவும், தொழில்நுட்பமாகவும் சிறுசிறு அரங்குகள் அமைத்து அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளோம்.
நாள் : 16-2-24 வெள்ளிக்கிழமை
மதியம் 2.30 முதல் மாலை 6 வரை
இடம் : “ அசோகவனம் ” காரைக்குளம்,
வடக்குப் பொய்கை நல்லூர், நாகை மாவட்டம்.
#Google Map :
https://maps.app.goo.gl/FJNfzyULAckMYfZR8
அனுமதி #இலவசம்.. அனைவரும் வருக..
#தலைமை :
ஜானி டாம் வர்கீஸ், IAS., நாகை மாவட்ட ஆட்சியர்
#சிறப்புரை : நாகை மாலி,
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்
வாழ்த்துரை : திட்ட மேற்பார்வைக் குழு
திட்ட விளக்கம் : S. விஷ்வந்த் கண்ணா
நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர்,
நிகழ்வில் :
• நிரந்தர வேளாண்மை அறிமுகம்
• ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தான அரங்குகள்
• நபார்டு வங்கியின் திட்டங்களும், செயல்பாடுகளும்
• மரபு கால்நடைகள், இயற்கை இடுபொருட்களின் அரங்குகள்
• மரபு காய்கறிகள், தானியங்கள், விதை கண்காட்சி
• 1300க்கும் மேற்பட்ட மரபு நெல் இரகங்கள் காட்சிப்படுத்துதல்
• மரபுசார்ந்த உணவுப் பகிர்வு, மதிப்புக்கூட்டுப் பொருட்கள்
• இயற்கை வழி உணவுப் பொருட்கள் விற்பனை
• நபார்டு பயனாளர்கள் பண்ணைப் பொருட்களை காட்சிபடுத்துதல்
#தொடர்புக்கு :
+91 94423 99395
+91 96260 92408
+91 87542 89534
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app
நன்றி..