Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"1,500 மரபு நெல் ரகங்களில் ஒரு நாள் வயல்வெளி சிறப்பு பயிற்சி "

"1,500 மரபு நெல் ரகங்களில் ஒரு நாள் வயல்வெளி சிறப்பு பயிற்சி "



#வானகம் நாகையில் நடத்தும்

1,500 மரபு #நெல் ரகங்களில் ஒருநாள் வயல்வெளி சிறப்பு பயிற்சி "

நாள் : பிப்ரவரி 4, 2024

ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை

#நம்மாழ்வார் நோக்கங்கிறது...

இயற்கை வழி வேளாண்மை மற்றும் இயற்கை வாழ்வியலுக்கு அடிப்படை நம் மண்ணின் விதை. #விதைகளே_பேராயுதம் என்பதை உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் அழிந்துபோன மரபு ரகங்களை மீட்க 2003ம்மாண்டு பூம்புகார் தொடங்கி கல்லணை வரை கிராமம் கிராமமாக பயணம் செய்தார்கள்.

அதன் விளைவாக மரபு நெல்ரகங்கள், தானியங்கள், காய்கறிகள் என பலரக மரபு விதைகளும், விதை பாதுகாவலர்களும் அடையாளம் கண்டார். அதன் பலான இன்று நமக்கு பல பல மரபு ரகங்கள் மீட்கப்பட்டு புழகத்தில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக #வானகம் “ நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்” நம்மாழ்வார் ஐயாவோடு பயணம் செய்த முன்னோடி உழவர்களையும், அவர்களின் அனுபவங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது.

அதன்படி 2024, #பிப்ரவரி 4ம் தேதி ஒருநாள் #மரபுநெல் ரகங்களில் பகுதிக்கும், பருவத்துக்குமேற்ற விதை தேர்வு தொடங்கி, விதைப்புமுறை, பராமரிப்பு , அறுவடை, மதிப்புக்கூட்டுதல், விற்பனை, சமைக்கும் முறைகள், மருத்துவத்தன்மைகள் வரை பல தகவல்களை அறிந்துகொள்ள பயிற்சி மற்றும் அனுபவப்பகிர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#பயிற்சியாளர்கள் :



1,500க்கும் மேற்பட்ட மரபு நெல்ரகங்களை மீட்டு, பயிரிட்டு ” அறிவர் மரபு விதை வங்கி “ என்கிற அமைப்பையும் உருவாக்கி உழவர்களுக்கு விதைப் பரவலாக்கம் செய்து வருபவரும், #சித்த மருத்தவருமான திரு.ப. சரவணகுமரன் அவர்களும் , அவரின் துணைவியாருமான நெல். ச. சிவரஞ்சனி (2022ம் ஆண்டுக்கான தமிழக #முதலவரின் மாநில இளைஞர் விருது பெற்றவரும் நம்மோடு அனுபவங்களை பகிர உள்ளார்கள்.

மேலும் இவர்கள் பல உழவர் குழுக்களோடு இணைந்து மரபு நெல்ரகங்களில் தூய்மையான கலப்பில்லா நெல் ரகங்களை பாதுகாத்தும் அதற்காக நெல் பாதுகாவலர் #தேபால்தேவ் அவர்களோடும் இணைந்து பயணிக்கிறார்.

மேலும் #நம்மாழ்வார் ஐயாவோடு கடந்த 2007ம் ஆண்டில் இணைந்து இயற்கை வழி வேளாண்மை & மரபு விதை மீட்புப் பணிகளைத் தொடங்கியவரும் முன்னோடி உழவருமான கருப்பம்புலம் நெல் #சிவாஜி அவர்கள். மண்ணின் மரபு நெல் ரகங்களை மீட்டுக்கும் தொடக்க கால பயணங்களில் நம்மாழ்வார் ஐயாவோடு ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

நிகழ்வு நாள் : 4-2-24 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை

⇒ நிகழ்விடம் : அறிவர் மரபு விதை வங்கி, குரவப்புலம் கிராமம், வேதாரண்யம், நாகை மாவட்டம்.

#Google Map : https://maps.app.goo.gl/ExyCKQpsiTBhSEtAA

⇒ நன்கொடை : ரூ. 500/- (non-refundable) *மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277 IFSC Code : IOBA0001371 Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.

✆ முன்பதிவுக்கு அழைக்கவும் : •+91 86680 98495 •+91 86680 98492 •+91 94423 99395 •+91 94458 79292

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org https://vanagam.page.link/app

நன்றி.