Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

#நம்மாழ்வார் ஐயாவின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

#நம்மாழ்வார் ஐயாவின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

**#நம்மாழ்வார் ஐயாவின்

10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு**

#வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவுகளோடு இயற்கை வழி வேளாண்மை, விதைகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், சூழலியல் செயல்பாடுகள் என பல செயல்பாடுகளும் முன்னெடுக்கப் படுகிறது.



இந்நிகழ்வில் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமான முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள், நண்பர்கள், களப்பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மக்களுக்கான பணியை செய்துவருகிறோம்.
அதன்படி வருகிற #ஜனவரி1, 2024ல் 10ம் ஆண்டு #நம்மாழ்வார் நினைவேந்தல் வானகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர் :

திரு. #சாவித்திரி_கண்ணன்

ஊடகவியலாளர்
நிகழ்ச்சி நிரல் :

=> நினைவஞ்சலி

=>பண்ணை பார்வையிடல்

=> மரபு கலை நிகழ்ச்சி

=> விதை கண்காட்சி

=>சிறுதானிய உணவு (மதிய உணவு).

=> பண்ணை விளைபொருட்கள் கண்காட்சி.

=>நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனை.

=>இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை


**நிகழ்வு நாள் : 1-1-2024**