"இயற்கை வேளாண்மை பயிற்சி"
#டிசம்பர்24 மதுரையில்
”#வானகம்” நடத்தும்
ஒரு நாள் சிறப்பு "இயற்கை வேளாண்மை பயிற்சி"
#நம்மாழ்வார் நோக்கங்கிறது :
காலங்காலமாக விதை என்பது பெண்கள் கையில் இருந்தவரை வேளாண்மை மிகச்சிறப்பாக இருந்தது. விதைபோல் பெண்கள் இயற்கை வழி வேளாண்மையை கையில் எடுக்கும்போது தான் வெற்றியடையும். அது பெரிய சமூகமாற்றத்திற்கு நகர்த்தி செல்லும். ஏனெனில் அவர்களுக்கு தான் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வு அதிகமாக இருக்கும் என்பதை #நம்மாழ்வார் ஐயா ஒவ்வொரு கூட்டத்திலும், எழுத்திலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
ஆகையால் பெண்கள் மத்தியில் இயற்கை வேளாண்மையை எடுத்து செல்வதில் அதிக காலம் நம்மாழ்வார் உழைத்தார். அதன் வெளிப்பாடாக நாடு முழுவதிலும் பெண்களே முழுப் பொறுப்போடு இயற்கை வேளாண்மையை கையில் எடுத்து சாதித்தும் வருகிறார்கள்,
அந்த வரிசையில் 2013ல் நம்மாழ்வார் எழுத்துக்களால் பெரும் உந்துதலோடு பாரம்பரியமான வேளாண்மை குடும்பத்திலிருந்து முதலில் களத்திற்கு வந்த பெண்மணி தான் Dr. S. பூங்குழலி (எ) புவனேஷ்வரி செல்வம் அவர்கள். மதுரை #கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த இவர் தன்னுடைய பெரும் ஈடுபாட்டை செழிமைப்படுத்திட தானும் தன்னோடு வயலில் உழைக்கும் மக்களையும், பள்ளி மாணவர்களையும் குழுவாக 2017ல் “#வானகம்” (#நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) அழைத்துவந்து முறையான பயிற்சி பெற்றார்.
பின்னர் தன்னுடைய நிலத்தில் ஒருபகுதியை ஒதுக்கி பல்வேறு மண்ணின் மரபு நெல் ரகங்களை பயிரிட்டு சாதித்தும் காட்டினார். அதோடு நில்லாமல் தான் பெற்ற பெரும் அனுபவத்தை உழவர்கள் மத்தியில் கொண்டும் சேர்த்தார். மேலும் #மரபு நெல் குறித்தான வேளாண்மையில் கெளரவ முனைவர் (Dr.) பட்டமும் பெற்றுள்ளார்கள்.
மேலும் உழவர்களுக்கு தானே விளைவித்த மரபு நெல்ரகங்களை விதைப் பரவலாக்கமும் செய்து, மிஞ்சிய நெல்லை மதிப்புக்கூட்டி நுகர்வோருக்கும் நேரடியாக கொண்டு சேர்த்து வருகிறார்.
மேலும் PKM செல்வம் அவர்கள் மண்ணின் மரபு கால்நடைகளை வளர்த்து பெருக்கம் செய்தும், தொடர்ந்து ஜல்லிகட்டு போட்டிக்கு காளைகளை பயிற்றுவித்து போட்டியாளர்களாக களம் கண்டுவருகிறார்கள்.
இதுபோல் #நம்மாழ்வார் ஐயாவின் எண்ணத்தை விரிவாக பரவலாக்கும் செய்யும் நோக்கில் செயல்படும் உழவர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு “ வானகம்” அமைப்பானது அவர்களின் பண்ணைகளில் சிறப்பு #பயிற்சி அளித்து வருகிறது.
அதனடிப்படையில் வருகிற 2023, #டிசம்பர் 24ல் மதுரை கருப்பாயூரணியில் அமைந்துள்ள “ PKM செல்வபுவனாஸ் ஆர்கானிக்கா, Dr. S. பூங்குழலி (எ) புவனேஷ்வரி செல்வம் அவர்களின் பண்ணையில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#இப்பயிற்சியில்
இயற்கை வேளாண்மையின் அடிப்படை தொடங்கி, இயற்கை இடுபொருட்கள், மரபு நெல் ரகங்களில் விதை முதல் மதிப்புக்கூடல் வரையிலான அனுபவங்களையும் கற்றுக் கொள்ளலாம்.
பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
#பயிற்சி நாள் : 24-12-23
ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி வரை
நிகழ்விடம் :
"PKM செல்வபுவனாஸ் ஆர்கானிக்கா”
Dr. S. பூங்குழலி (எ) புவனேஷ்வரி செல்வம்
கருப்பாயூரணி, சிவகங்கை சாலை, மதுரை.
மதுரை #மாட்டுத்தாவணி மற்றும் #பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பாயூரணிக்கு பேருந்துவசதி உள்ளது.
Google Location :
https://maps.app.goo.gl/ZiyoUsX7RzEum5J5A
பயிற்சி நன்கொடை : ரூ. 500/-(non-refundable)
*மூலிகை தேநீர் & உணவு வழங்கப்படும்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation :
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
• +91 96260 92408
• +91 94458 79292
- +91 86680 98492
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org https://vanagam.page.link/app
நன்றி.