டிசம்பர் 8ல் 3நாள் பயிற்சிகள்

##மாற்றம் என்பது சொல் அல்ல...
செயல்..
#கோ.நம்மாழ்வார்
மாற்றத்திற்கான விதை தொடர்ந்து விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்விதை இச்சமூகத்தில் தொடர்ந்து வளர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தும்.
#நம்மாழ்வார் வழியில் இயற்கை வழி வேளாண்மைக்கான பணிகளை “ #வானகம் – #நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் “ தொடர்ந்து செய்துகொண்டே வருவதை நாம் அனைவரும் அறிந்தது. அதோடு தொடர்ந்து மூன்று நாள், ஒரு நாள், ஒரு மாதம், மூன்று மாதம், ஆறுமாதம் என விரிவான பயிற்சிகளும் அளித்து வருகிறோம்.
அதன்படி “ #மூன்றுநாள்_இயற்கை_வழி_வேளாண்மை_பயிற்சி “ மாதத்தின் ஒவ்வொரு 2வது வாரமும் வெள்ளி முதல் ஞாயிறு வரை நடைபெற உள்ளது. ஆகையால் வருகிற #டிசம்பர் மாதத்திற்கான 3நாள் பயிற்சி 8.12.23 வெள்ளி முதல் 10.12.2023 ஞாயிறு வரை நடைபெற உள்ளது.
வானகம் நடத்தும்
இப் பயிற்சியில் :
⚫ இயற்கை வழி வேளாண்மை
⚫ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
⚫ மழை நீர் அறுவடை
⚫ உயிர்வேலி
⚫ ஒருங்கிணைந்த பண்ணை
⚫ இடுபொருள் செய்முறை பயிற்சி
⚫ களப்பயிற்சி
⚫ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
⚫ கால்நடை பராமரிப்பு
⚫ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
⚫ மரபு விளையாட்டு
- ஆகியவை இடம்பெறும்.
⇒ **பயிற்சி வருகிற 8.12.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி 10.12.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)
பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)
⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்._**
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
+91 86680 98492
+91 86680 98495
+91 94458 79292