நவம்பர் 26 கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாள் சிறப்பு இயற்கை வேளாண்மை பயிற்சி

##நவம்பர் 26 கோபிசெட்டிபாளையத்தில்
ஒரு நாள் சிறப்பு
” இயற்கை வேளாண்மை பயிற்சி “
##நம்மாழ்வார் நோக்கங்கிறது :
#பசுமைபுரட்சியின் விளைவால் உழவர்களின் நிலமெல்லாம் இரசாயன நஞ்சாகி, உண்ணும் உணவும், குடிநீரும் நஞ்சாகி அனைவரும் தீராத நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
” வேளாண்மை என்பது பகுதிக்கு பகுதி மாறுபடும் “ ஆகையால் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள் அனைவரும் பலனளிக்காது. ஆகையால் நாடு முழுவதும் நஞ்சில்லாமல் சிறப்பாக இயற்கை வழி வேளாண்மை செய்யும் முன்னோடி பண்ணைகளையும், உழவர்களை அடையாளம் காண வேண்டும்.
அப்படி அடையாளம் கண்டு அவர்களை பயிற்றுநர்களாக்கி அவர்களின் அனுபவ அறிவையும், தொழில்நுட்ப அறிவையும் பரவலாக்க வேண்டும். அவ்வாறு பரவலாக்கும் போது நஞ்சில்லா உணவு பல்லுயிர்களுக்கும் சாத்தியமாகும்.
அதன்படி #நம்மாழ்வார் ஐயாவின் எண்ணத்தை விரிவாக பரவலாக்கும் செய்யும் நோக்கில் “ வானகம்” அமைப்பானது தொடர்ந்து உழவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பண்ணைகளில் சிறப்பு #பயிற்சி அளித்துவருகிறது.
அதனடிப்படையில் வருகிற 2023, #நவம்பர் 26ல் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள “ மருதம் இயற்கை வேளாண் பண்ணையில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் தென்னை, வாழை, மஞ்சள், நெல் மற்றும் பல பயிர்களை... இயற்கை வழி வேளாண்மையில் பயிரிட்டு வரும் முன்னோடி உழவரும், #நம்மாழ்வார் ஐயாவின் நெருங்கிய நண்பரும், ஐயாவோடு மிக நீண்ட பயணத்தில் இணைந்து இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்த இயற்கை வாழ்வியலாளருமான ”மருதம் #குமார் “ அவர்களின் அனுபவங்களையும், #வானகம் பயிற்சி குழுவினரின் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இப் பயிற்சியில் கற்றுக் கொள்ளலாம்.
மேலும் மருதம் #குமார் அவர்களின் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையில் தொடந்து *பல ஆண்டுகளாக மறுதாம்பு முறையில் வாழை சாகுபடி எளிய முறையில் நடைபெற்று வருகிறது. தொடந்து 20ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சளை அவர்களே விதை சேகரித்து மறு உற்பத்தி செய்து வருகின்றனர்.
குறைந்த தண்ணீரில் தென்னை மரங்களுக்கு நடுவில் அகழி அமைத்து மூடாக்கிட்டு பல்லுயிர்களும் வாழும் உயிர்வேலியுடன் மிகச்சிறப்பான ஒருங்கிணைந்த #இயற்கை வேளாண்மை முறையை கையாண்டு வருகிறார்கள்.
#இப்பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் அடிப்படை தொடங்கி, இயற்கை இடுபொருட்கள், பண்ணைவலம், மூடாக்கு முறைகள், காடுவளர்ப்பு உட்பட பல அனுபவங்களையும் கற்றுக் கொள்ளலாம்.
#பயிற்சி நாள் : 26-11-23 ஞாயிறு
காலை 9மணி – மாலை 5மணி வரை
நிகழ்விடம் :
"மருதம் இயற்கை வேளாண் பண்ணை"
தொட்டியங்காடு, கோபிசெட்டிபாளையம், ஈரோடு.
Google map :
https://maps.app.goo.gl/F1AhQmfd5CmuRqBt7
பயிற்சியை #வானகம் பயிற்சி குழுவினர் வழங்குவார்கள்.
பயிற்சி நன்கொடை : ரூ. 500/-(non-refundable)
*மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation :
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
• +91 96260 92408
• +91 94458 79292
பேருந்து வழித்தடம் :
#கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து
- காலை 6.15 க்கு 10.B நகரப்பேருந்து.
- காலை 7.15 க்கு 10 A நகரப்பேருந்தில் நாதிபாளையம் இறங்கவும்.
- காலை 8.45 க்கு P. 5 நகரப்பேருந்தில் செங்கோட்டையன் நகர் இறங்கவும்.
தொட்டியங்காடு என்று விசாரித்து வரவும்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பண்ணை உள்ளது.
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app
நன்றி.