Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

பள்ளி மாணவர்களுக்கு #இயற்கை_வேளாண்மை அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு #இயற்கை_வேளாண்மை அறிமுகம்

”பள்ளி மாணவர்களுக்கு #இயற்கை_வேளாண்மை அறிமுகம்“

நாம் வயதாகி இன்று கற்கும் #இயற்கை வேளாண்மை & வழ்வியலானது இனிவரும் தலைமுறைகள் மாணவ காலத்திலே கற்பது நல்லதொரு எதிர்காலம் உதயமாகுவதைக் காட்டுகிறது.

அப்படியொரு நிகழ்வுகள் #வானகத்தில் தொடந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் 28-10-23 கரூரிலிருந்து #பாரதி_உயர்நிலைப்பள்ளி, #வெள்ளியணை பகுதி மாணவ மாணவியர் 177பேரும், 18ஆசிரியர்களும் வானகம் வந்தார்கள்.

அவர்கள் வானகத்தில் இரசாயன நஞ்சில்லாமல் இயற்கையோடு இணைந்த வேளாண் நடைமுறைகளை அறிந்தார்கள்.

நிகழ்வு #நம்மாழ்வார் ஐயா நினைவுகளோடு நினைவிடத்தில் தொடங்கி, மரபு கால்நடைகள், விதைகள் , காடுகள், இயற்கை இடுபொருட்கள், மரபு நெல்ரகங்கள், ஒருங்கிணைந்த பண்ணையின் அமைப்பு முறைகள், சுற்றுசூழலுக்கு கேடில்லா கட்டிட முறைகள் & வாழ்வியல் முறைகள் என அனைத்தையும் கண்டு உணர்ந்தனர்.

#நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களும் , எண்ணங்களும் வளரும் காலத்திலே நல் விதைகளாக விதைக்கப் பெற்றது. அவை வளர்ந்து அனைவருக்கும் ஆரோக்கியமான இயற்கையோடு இணைந்த வாழ்வளிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி.
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org https://vanagam.page.link/app