வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் பயிற்சி

##“வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் பயிற்சி “
நாள் : 14-10-23, சனிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இன்றைய நவீன சூழலில் சத்துணவுப் பற்றாக்குறையாலும், நஞ்சான உணவை உண்டு நோய்களின் பிடியில் சிக்கி மீள்வதறியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதற்கு எளிய தீர்வாக நம்மாழ்வார் ஐயா அவர்கள் காட்டிய நல்வழி “ நம் உணவை நஞ்சில்லாமல் நாமே உற்பத்தி செய்வோம் “.
ஒரு சதுர அடியில் கிடைக்கும் சூரிய ஒளியை, அன்றாடம் வீட்டில் கிடைக்கும் மட்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றி, மண்ணின் மரபு விதை விதைத்து,
எளிய பரமாரிப்பு செய்தால் 20நாளில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான ஒருகட்டு கீரைகளை அறுவடை செய்யலாம். 30 நாட்களில் முள்ளங்கியும், 45நாட்களில் வெண்டைக்காயும், 60-70 நாளில் தக்காளியும், கத்தரியும், அவரையும், சுரையும், பூசணியும் என வீட்டுக்குத் தேவையான உணவுகளை அறுவடை செய்ய முடியும் என்பதை நம்மாழ்வார் ஐயா அனைவருக்கும் மிக எளிமையாக கற்றுக் கொடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக “ #வானகம் “ அமைப்பானது ஒவ்வொரு பயிற்சிகளிலும் வீட்டுத் தோட்டம் & மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளையும், தொடர்ந்து வீட்டுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப அறிவையும் கைமாற்றிக் கொடுத்து வருகிறது.
அதன்படி, வருகிற
அக்டோபர் 14,2023 சனிக்கிழமை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை
இப்பயிற்சியில்
⚫வீட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
⚫ மண்கலைவை தயார் செய்தல்
⚫ விதைத் தேர்வு, விதைக்கும் முறை
⚫ உரங்கள் தயாரிப்பு, பூச்சிக்கட்டுபாடு
⚫ பராமரிப்பு, அறுவடை போன்ற பல தொழிநுட்ப அனுபவங்களை நம்மோடு பகிர வரும்
பயிற்றுநர் :
“ திரு. ரமேஷ் “ அவர்கள்,
⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்”
நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)
⇒ *மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.
**
Nammalvar Ecological Foundation
Account No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch,
Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :+91 86680 98492
+91 86680 98495
+91 94458 79292
குறிப்பு :
வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது.
⚫ பாலித்தின் பைகள்
⚫ சோப்பு
⚫ ஷாம்பு
⚫ பேஸ்ட்
⚫ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கை விளக்கு (torch) எடுத்து வரவும்.
நன்றி.