Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

” மரபுசார் கால்நடை வளர்ப்பு & பராமரிப்பு பயிற்சி “

” மரபுசார் கால்நடை வளர்ப்பு & பராமரிப்பு பயிற்சி “

##மரபுசார் கால்நடை வளர்ப்பு & பராமரிப்பு பயிற்சி


நாள் : 23-09-23 சனிக்கிழமை

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை




**பசுமைப் புரட்சி எப்படி மண்ணையும், மக்களையும் மலடாக்கியதோ, அதுபோல வெண்மைப்புரட்சியானது மண்ணின் மரபுசார் கால்நடைகளை அழித்து, நம் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத கால்நடைகளை இறக்குமதி செய்தது.



இதன் விளைவால் குழந்தைகள் குடிக்கும் பால் உட்பட நஞ்சாகி, இரத்தசோகை, குறைந்த வயதில் பெண்கள் பூப்பெய்தல் தொடங்கி, சர்க்கரை, புற்றுநோய் என பலநோய் கொடுமைகளுக்கு உழவர்களையும், மக்களையும் ஆளாக்கியது.

இதனை உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் மண்ணின் மரபு விதைகளையும், தொழில்நுட்ப அனுபவ அறிவையும் மீட்க பலரோடு இணைந்து பணியாற்றியது போல் “ மண்ணின் மரபுசார் கால்நடைகளையும், மூலிகை மருத்துவ அறிவையும் மீட்க பல முன்னோடி கால்நடை வளர்ப்போர்களோடும், மருத்துவர்களோடும், பேராசிரியர்களோடும் இணைந்தார்.

அப்படி ஐயாவோடு இணைந்த பலரில் முதன்மையானவரும், நண்பரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தஞ்சாவூர் பயிற்சி மையத்தின் தலைவர் & பேராசிரியர் முனைவரும், மருத்துவருமான திரு. புண்ணிய மூர்த்தி ஐயா அவர்கள்.

கால்நடைகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய கோமாரி உட்பட கழிச்சல், வயிறு உப்புசம், மடிநோய்கள் உட்பட பல கொடிய நோய்களையும் களத்தில் இறங்கி உள்ளூரில் கிடைக்கும் எளிய மூலிகளையும், ஐந்தரைப் பெட்டி பொருட்களையும் கொண்டே விரட்டினார்கள்.

“ #வானகம் “ நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவமும் தொடர்ந்து மண்ணின் மரபுசார் அறிவையும், தொழில்நுட்பங்களையும் மீட்க “ மருத்துவர் புண்ணிய மூர்த்தி ஐயா “ போன்ற முன்னோடிகளோடு கரம் கோர்த்து பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது.

அதன்தொடர்ச்சியாக, ஒருநாள் பயிற்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது. பயிற்சி வருகிற

நாள் : 23-09-23 சனிக்கிழமை

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை



இப்பயிற்சியில்

• பகுதிசார்ந்த மண்ணின் மரபுசார் கால்நடைகளின் அவசியம்...

• கால்நடைகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவம், பராமரிப்பு முறைகள்...



• மேய்சல் முறை கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்களும், அனுபவ பகிர்வும்... .*



⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)

⇒ *மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும். **



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,

கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app