Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

"ஒருமாத இயற்கை வேளாண்மை களப்பயிற்சி "

"ஒருமாத இயற்கை வேளாண்மை களப்பயிற்சி "
**வானகத்தில் "ஒருமாத இயற்கை வேளாண்மை களப்பயிற்சி " **
பயிற்சி நாள் : 12.8.2023 – 11.9.2023 வரை .

நம்மாழ்வாரின் நோக்கங்கிறது...
என்னை(நம்மாழ்வார்) மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்.

வானகம் நடத்தும்
இப் பயிற்சியில் : ⇒ ஆண்டு முழுவதற்குமான காய்கறி மற்றும் கீரை சாகுபடிகள்

⇒ நிரந்தர வேளாண்மை

⇒ வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம்

⇒ ஏர் உழவு

⇒ கால்நடை வளர்ப்பு , தேனீ வளப்பு

⇒ பூச்சிகள் & களை மேலாண்மை

⇒ வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு முறை

ஆகியவை இடம்பெறும்.



#குறிப்பு : வானகத்தில் நடக்கும் 3நாள் பயிற்சிகள் உட்பட அனைத்து சிறப்புப் பயிற்சிகளிலும் கட்டணமில்லாமல் கலந்து கொள்ளும் வாய்ப்பு...



பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.



இப்பயிற்சி #ஆகஸ்ட்12, 2023 முதல் செப்டம்பர் 11, 2023 வரை நடைபெறுகிறது".



⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)

ஐந்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.

⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்._**





முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை ,

கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app