Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

“ஆடிப் பட்டம் தேடி விதை “

“ஆடிப் பட்டம் தேடி விதை “

“ஆடிப் பட்டம் தேடி விதை “ ஒரு நாள் பயிற்சி


அதன்படி, வருகிற

ஆகஸ்ட் 12,2023 சனிக்கிழமை

காலை 10மணி முதல் மாலை 5மணி வரை .



**விதைகளே பேராயுதம்** என்பதை உணர்ந்த **#நம்மாழ்வார்** ஐயா அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து உழவர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த **” மண்ணின் மரபு விதை “** சார்ந்த வாழ்வியலை இனிவரும் இளம்தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுப்பதற்கான முயற்சிகளை செயல்வடிவம் கொடுத்தார்.



மேலும் உழவர்களின் விதை உழவர் கையில் இருக்க வேண்டும் என்பதற்காக “ விதைப்பு தொடங்கி விதை பகிர்வு வரையிலான நுட்பங்களை எதிர்வரும் தலைமுறை அறியும் வண்ணம் பயிற்சி வடிவில் கைமாற்றிக் கொடுத்தார்.



அதன் தொடர்ச்சியாக “ #வானகம் “ அமைப்பானது நம்மாழ்வார் பிறந்த நாளை மரபு விதை நாளாக கொண்டாடியும், மரபு விதை சேகரிப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் தொழில்நுட்ப அனுபவ அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.



இப்பயிற்சியில் ⚫ பகுதிசார்ந்த மரபு விதையின் அவசியமும்...

⚫ பருவங்களும், பட்டங்களின் முக்கியத்துவமும்...

⚫ விதைப் பன்மயமும், பயன்படுத்தும் முறையும்...

⚫ விதை முதல் விதை வரை உற்பத்தி, பராமரிப்பு...

⚫ விதையின் அரசியலும், கைமாற்றிதலின் அவசியமும்... என நம்மோடு பல அனுபவங்களைப் பகிர வருபவர்

பயிற்சியாளர்: “ திரு. இரா.வெற்றிமாறன் “ அவர்கள்,



⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)



பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)

*மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதியில்லை .



நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

https://vanagam.page.link/app