Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

#ஆழ்ந்த இரங்கல்கள் :

#ஆழ்ந்த இரங்கல்கள் :

வானகம் வருந்துகிறது.

பவானி ஆறு பாதுகாப்பிற்காக தனது வாழ்வை அற்பணித்த மருத்துவர் சத்தியசுந்தரி அம்மா (வயது 92) அவர்களின் மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

மருத்துவர் சத்திய சுந்தரி அம்மாள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் ஆவார். 1980-களின் இறுதியில், அப்பகுதி பெண்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கான காரணம் பவானி ஆற்று நீர் மாசுபடுவதே என்பதை கண்டறிந்து, சவுத் இந்தியன் விஸ்கோஸ் (South India Viscose - SIV) ஆலையின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நதியைக் காக்க மாபெரும் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

தன் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைக் கவனித்து, அதற்கு பவானி ஆற்று நீர் மாசுபட்டதே காரணம் என்பதை கண்டறிந்தார். நீதிமன்றங்கள் மூலம் கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து ‘பவானி நதி நீர் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ என்ற மக்கள் இயக்கத்தை உருவாக்கினார்.

இவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் போராட்டங்களை மையமாக வைத்து முனைவர் ஈரோடு சர்மிளா என்பவரால் 'வானி' எனும் தலைப்பில் வளரிளம் பருவத்தினருக்கான நாவல் ஒன்று எழுதப்பட்டுள்ளது.கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்றும் பல மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டில் உள்ளன.

சுற்றுச்சூழல் போராளி மருத்துவர் சத்திய சுந்தரி அம்மாள் அவர்களின் மறைவிற்கு "வானகம்" நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறது.