Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

”மரபு நெல் ரகங்கள் விதை முதல் விற்பனை வரை ” பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு

”மரபு நெல் ரகங்கள் விதை முதல் விற்பனை வரை ” பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு
**”மரபு நெல் ரகங்கள் விதை முதல் விற்பனை வரை ” பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு

**



#நம்மாழ்வார் நோக்கிங்கிறது...



இயற்கை வழி வேளாண்மை மற்றும் இயற்கை வாழ்வியலுக்கு அடிப்படை நம் மண்ணின் விதை. #விதைகளே_பேராயுதம் என்பதை உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் அழிந்துபோன மரபு ரகங்களை மீட்க 2003ம்மாண்டு பூம்புகார் தொடங்கி கல்லணை வரை கிராமம் கிராமமாக பயணம் செய்தார்கள்.




அதன் விளைவாக மரபு நெல்ரகங்கள், தானியங்கள், காய்கறிகள் என பலரக மரபு விதைகளும், விதை பாதுகாவலர்களும் அடையாளம் கண்டார். அதன் பலான இன்று நமக்கு பல பல மரபு ரகங்கள் மீட்கப்பட்டு புழகத்தில் உள்ளது.



இதன் தொடர்ச்சியாக #வானகம் “ நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்” நம்மாழ்வார் ஐயாவோடு பயணம் செய்த முன்னோடி உழவர்களையும், அவர்களின் அனுபவங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது.



அதன்படி #ஜூலை 29, 2023ம் தேதி ஒருநாள் #மரபுநெல் ரகங்களில் பகுதிக்கும், பருவத்துக்குமேற்ற விதை தேர்வு தொடங்கி, விதைப்புமுறை, பராமரிப்பு , அறுவடை, மதிப்புக்கூட்டுதல், விற்பனை, சமைக்கும் முறைகள், மருத்துவத்தன்மைகள் வரை பல தகவல்களை அறிந்துகொள்ள பயிற்சி மற்றும் அனுபவப்பகிர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





#பயிற்சியாளர்கள் :





#நம்மாழ்வார் ஐயாவோடு கடந்த 2007ம் ஆண்டில் இணைந்து இயற்கை வழி வேளாண்மை & மரபு விதை மீட்புப் பணிகளைத் தொடங்கியவரும் முன்னோடி உழவருமான கருப்பம்புலம் நெல் #சிவாஜி அவர்கள். மண்ணின் மரபு நெல் ரகங்களை மீட்டுக்கும் தொடக்க கால பயணங்களில் நம்மாழ்வார் ஐயாவோடு ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.



இன்றுவரை **1300க்கும் மேற்பட்ட மரபு நெல்ரகங்களை மீட்டு, பயிரிட்டு ” அறிவர் மரபு விதை வங்கி “ என்கிற அமைப்பையும் உருவாக்கி உழவர்களுக்கு விதைப் பரவலாக்கம் செய்து வருகிறார்.**







அவர்களோடு #சித்தமருத்துவர் & இயற்கை வழி உழவர் திரு.சரவணகுமரன் அவர்களும் , நெல். சிவரஞ்சனி 2022ம் ஆண்டுக்கான #முதலமைச்சர் மாநிலஇளைஞர்விருது பெற்றவர்.





நிகழ்வு நாள் : ஜூலை 29, 2023 சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை



⇒ பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

சுருமான்பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)



பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)

மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.*





குறிப்பு : ஜூலை 30ம் தேதி வானகத்தில் நடைபெறும் களப்பணியில் பங்கேற்கலாம்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation



முன்பதிவு அவசியம்.

✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.


✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :



குறிப்பு :

⚫ பாலித்தின் பைகள்

⚫ சோப்பு

⚫ ஷாம்பு

⚫ பேஸ்ட்

⚫ கொசுவர்த்தி


போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.



பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கை விளக்கு (torch) எடுத்து வரவும்.

நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://vanagam.org

[https://vanagam.page.link/app]