Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

#2025_கரூர்_இயற்கை_வேளாண்_திருவிழா -

#2025_கரூர்_இயற்கை_வேளாண்_திருவிழா -

#வானகம் முன்னின்று நடத்தும்

” கரூர் இயற்கை வேளாண் திருவிழா 2025 “



#நம்மாழ்வார் ஐயா அவர்கள் நாடுமுழுவதும் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி ஓயாது பயணங்களும், பயிற்சிகளும் அளித்து வந்தது அனைவரும் அறிந்ததே...

அதன் விளைவால் நாடுமுழுவதும் இயற்கை வேளாண்மையும், வாழ்வியலும் பெருகியது. அவற்றை ஒத்த சிந்தனையாளர்களோடு கரம்கோர்த்து விதைத் திருவிழா, மாநாடுகள், நிகழ்வுகள், பயிற்சிகள் என தொடர்ந்து விரிவுபடுத்தி வந்தார்.

இந்நிலையில் இவ்வாழ்வியல் முறையில் வெற்றியடைந்த அனுபவங்களையும், செயல்பாட்டாளர்களையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் வேலையை #வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) தொடர்ந்து செய்துவருகிறது.

அதன் தொடர்ச்சியாக #வானகம், #ககரூர் இயற்கை விவசாயிகள் சங்கம், #JCI கரூர் டைமண்ட் & Young Indians ஆகிய அமைப்புகளை ஒன்றிணைத்து ”இயற்கை வேளாண் திருவிழா 2025 “ ஏற்பாடு செய்துள்ளது.

#நாள் : 24 - 08 - 2025, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : கொங்கு திருமண மன்றம் , கோவை ரோடு, கரூர்.

நிகழ்வில்

இயற்கை வேளாண் வல்லுனர்களின் சிறப்புரைகளுடன் 🙌🏾

🥗 இயற்கை உணவு திருவிழா 🍯 : சமைக்காத உணவுகள் No oil,No boil 100க்கும் மேற்பட்ட வகைகள் 🟢 பாரம்பரிய அரிசி சிறுதானிய பலகாரங்கள், உணவுகள் 🟢 இயற்கை பானங்கள்🟢 மூலிகை சத்து உணவுகள் .

🐂🐓🐐பாரம்பரிய கால்நடைகளின் கண்காட்சி - இயற்கை உரங்கள், உழவு கருவிகளின் கண்காட்சி 🛞 -🪘 பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் 🪇

🫘 மரபு விதைகள் கண்காட்சி 🌾 : 120 வகையான பாரம்பரிய நெல் , நாட்டு காய்கறி, கிழங்குகள் வகைகள், சிறுதானியங்கள்

🌱இயற்கை வேளாண் கருத்தரங்குகள்: நீர் மேலாண்மை 💧, தரிசு நில மேம்பாடுகள் 🏜️ , பூச்சி மேலாண்மை 🕷️ , காய்கறி சாகுபடி நுட்பங்கள் 🫛🍑 , மரபு விதைகள் பராமரிப்பு பெருக்கம் 🫘

🙌🏾 100க்கும் மேற்பட்ட இயற்கை உணவு பொருட்கள், மதிப்பு கூட்டு உணவுகளின் விற்பனை அரங்குகள் 🙏🏾



தொடர்புக்கு : M.N.பெரியசாமி : 9789144999 வானகம் ரமேஷ்: 9626092408 M.S.சுப்பிரமணியன்: 8870127071 R.பொன்ராஜ் : 9944888202

அனைவரும் வருக... நன்றி...