” மரங்களும், உணவுக்காடு வளர்ப்பு பயிற்சி ”

#பருவநிலை மாற்றத்தின் விளைவாக இன்று வேளாண்மையும், உணவு உற்பத்தியும் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இரவு பசியோடு படுக்கைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சத்துணவுப்பற்றாக்குறையால் பெரும் நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலைக்கு காரணம் ”காடுகளின் அழிப்பும், இயற்கை சூழல் அழிப்பும்“ தான் . ஆகையால் மறுபடியும் இயற்கையை பாதுகாக்க நாடுமுழுவதும் இயற்கை வேளாண்மையும், காடுகளின் பரப்பளவையும் அதிகரிக்க வேண்டும்.
கோ. #நம்மாழ்வார்
இச்சூழலை “ வானகம் - நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் “ கருத்தில் கொண்டு இயற்கை வேளாண்மையில் மரங்களும், உணவுக்காடு வளர்ப்பும் என்கிற *ஒருநாள் பயிற்சியை திட்டமிட்டுள்ளோம்.
நாள் : ஜூலை 15, 2023 சனிக்கிழமை
காலை 9மணி முதல் மாலை 5மணி வரை
#**இப்பயிற்சியில் பயிற்றுநர்களாக நம்மாழ்வார் ஐயாவின் மாணவரும், நெருங்கிய நண்பரும் 40ஆண்டுகளாக காடு வளர்ப்பும், இயற்கை வேளாண்மையும் செய்து வருபவர் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தின் ” கற்பகசோலை “ மரம் தங்கசாமி ஐயா** அவர்கள்.
அவருக்குத் துணையாக தன்னுடைய மகன் மரம் தங்ககண்ணன் அவர்களும் உள்ளர்கள். வறட்சியான பகுதியில் மரம், காடு வளர்ப்பில் தொடர்ந்து சாதனைகள் பல புரிந்து வருகிறார்கள். அவர்களின் நீண்ட அனுபவத்தையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொடுக்க உள்ளார்கள்.
அவர்களோடு வனசரகராக அரசுப் பணியாற்றிவரும் திரு, கார்த்திக்ராஜா அவர்களும்
#மரங்கள் மற்றும் காடுகளின் அவசியமும், பயனும் மரப் பயிர்களுக்கான நாற்றாங்கால் தொடங்கி அறுவடை வரையிலான தொழில்நுட்பங்களை இப்பயிற்சியில் கற்றுக் கொடுக்க உள்ளார்கள்.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
வழித்தடத்தைப் பார்க்க : (https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19)
பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 500/- (non-refundable)
பயிற்சி கையேடு, மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.
Nammalvar Ecological Foundation
- Account No: 137101000008277
- IFSC Code : IOBA0001371
- Bank Name : Indian Overseas Bank,
- Branch Name : Kadavoor Branch,
- Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
✆ தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.
✆ முன்பதிவுக்கு அழைக்கவும் :
+91 86680 98492
+91 86680 98495
+91 94458 79292 (whatsapp)
குறிப்பு :
- வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது.
⚫ பாலித்தின் பைகள்
⚫ சோப்பு
⚫ ஷாம்பு
⚫ பேஸ்ட்
⚫ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,
வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கை விளக்கு (torch) எடுத்து வரவும்.
நன்றி.
[https://vanagam.page.link/app]