Vanagam Logo

Vanagam

Nammalvar Ecological Foundation

Founded by Dr. G Nammalvar

Donate Get our App

நம்மாழ்வாரின் 87 வது பிறந்தநாள் விழா

நம்மாழ்வாரின் 87 வது பிறந்தநாள் விழா

##**#நம்மாழ்வாரின் 87 வது பிறந்தநாள் விழா* &
#மரபு #விதை திருவிழா :

நாள் :06-04-2025 ஞாயிற்றுக்கிழமை*
காலை 9 மணி முதல் மாலை 5 வரை

"விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை"


நஞ்சில்லா உணவையும், ஆரோக்கியாமன சூழலையும் அனைத்துயிர்களுக்கு உறுதி செய்ய வேண்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா #நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே.

அவர் விதைத்துச் சென்ற விதைகளை பல்கிப் பெருகி தினசரி பேசு பொருளாக உணவுவிலும், சூழலியலிலும் மாறி நிற்கிறது.

#உணவு உற்பத்தியிலும், அனைவருக்கும் உணவு உத்திரவாதம் செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கும் மானாவாரி உழவர்களை ஒருபடி மேலே உயர்த்துவது தான் #நம்மாழ்வார் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகத் தான் #வானகம் அனைத்து செயற்பாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. இப்படி சூழலியல், கல்வி, மருத்துவம் என எண்ணற்ற மாற்றங்களையும், முன்னோர்கள் உழைப்பின் அறுவடையும் நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதை நினைவு கூறும் விதமாக தான் வருடத்தில் இரண்டு முறை வானகத்தில் கூடுகிறோம். அதன்படி வரும் ஏப்ரல் ஆறாம் தேதியும் கூட இருக்கிறோம்.

அந்த நிறைவான நன்நாளில் உழவு, சூழலியல், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் இந்தச் சமூகம் பயனுற வாழும் நன் நெஞ்சங்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து பாராட்டியும், #நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

மேலும் #நம்மாழ்வாரின் பிறந்த நாளை மரபு விதைத்திருவிழாகவும் கொண்டாடி வருகிறோம். அந்நாளில் மரபு விதைக் காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பாராட்டும் பொருட்டும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது. இந்த 2025 ஆண்டும் வழக்கம் போல மரபு இசை, மரபு கலைகளோடு அனைவரும் கூடி உறவாடுவோம், உரையாடுவோம்.

#மரபு விதைக் கண்காட்சி :

வழக்கம் போல் இந்தாண்டும் விதைக்கண்காட்சியில் சிறு தானியங்கள், மரபு நெல்ரகங்கள், காய்கறி ரகங்கள், கிழங்கு வகைகள், மூலிகைகள், பயறு, எண்ணெய் வித்துக்கள் விதை காட்சிப்படுத்துதல் நடைபெறுகிறது.

சிறப்பு #விருந்தினர் :
மருத்துவர் . நா. புண்ணியமூர்த்தி,
பேராசிரியர் (ஓய்வு)
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கழகம், அவர்களும்,

திரு. இ. வெள்ளைச்சாமி, செயலாளர்,
செரு தொண்டு நிறுவனம், மாநிலத் தலைவர், பஞ்சாயத்து ராஜ் இயக்கம், அவர்களும்,

முன்னோடி உழவர்களும், விதை சேகரிப்பாளர்களும், சுற்றுச் சூழலியலாளர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள்.

2025ம் ஆண்டுக்கான மக்களின் பங்கெடுப்போடு
#நம்மாழ்வார் விருதுகள் :

#விருது வழங்குவதை ஒரு சடங்காக மாற்றாமல், அவர்கள் பணியை அங்கிகரிக்கும் விதமாக மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு ஒரு தொகையுடன் கூடிய விருது வழங்குவதென முடிவு செய்துள்ளோம்.

அதன்படி
#இயற்கை வழி வேளாண்மைக்கான விருது :


திரு. M.N.பெரியசாமி,,
வயல் 47, கரூர்.

#மரபு மருத்துவத்திற்கான விருது :


மருத்துவர் . காசி.பிச்சை.
துணை இயக்குனர் (ஓய்வு) கால்நடைத்துறை, திருமானூர்.


#கல்விக்கான விருது:
தோழர் . பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு,,
பொதுச் செயலாளர், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை.


சுற்றுச்சூழலுக்கான விருது :
திரு. இளங்கோ கல்லானை ,
சூழலியலார், மதுரை.

மேலும் தங்களின் பங்களிப்பும் சமூக செயற்பாட்டாளர்கள் தனித்து இல்லை என்ற உணர்வையும், தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட உந்து சக்தியாகவும் இருக்கும். * ஆகையால் #சிறு தொகையாக இருந்தாலும் மக்களின் பங்களிப்போடு இதனை செய்வதில் #வானகம் மகிழ்ச்சி அடைகிறது.

ஆகவே பின்வரும் வங்கி கணக்கில் நீங்கள் அளிக்க விரும்பும் நன்கொடைத் தொகையை செலுத்தி*
info@vanagam.org என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது +91 94458 79292 எண்ணிற்கு Whatsapp-ல் தெரியபடுத்தவும். ரசீது அனுப்பி வைக்கப்படும்.



நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation

✆ தொடர்புக்கு : :