Recent Training Workshops
ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 (2/23/2021)
வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.
நாள் : 28-02-2021 ( ஞாயிறு கிழமை )
நேரம் : காலை 9.00 to 4.00தொடர்புக்கு : 9566667708 / 9543469050
இடம் : தமிழ் நிலம் இயற்கை வேளாண் பண்ணை , திருக்கழுக்குன்றம் , மாமல்லபுரம் சாலையில்.
( இறையழகன் அவர்களின் பண்ணை )பயிற்றுனர்: வானகம் வெற்றிமாறன்.இரா மற்றும் வானக குழுவினர் .
பயிற்சியில் :
- ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
*இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
- ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி
பயிற்சி கட்டணம் : ₹ 500.
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu.ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 (2/22/2021)
வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.
நாள் : 28-02-2021 ( ஞாயிறு கிழமை )
நேரம் : காலை 9.00 to 4.00தொடர்புக்கு : 9445879292
6380880615
இடம் : தங்க மயில் இயற்கை வேளாண் பண்ணை , வைகாசிப்பட்டி, அலங்காநல்லூர் .
( பண்ணைக்கு செல்வதற்கு அலங்காநல்லூரிலிருந்து (van) வாகன வசதி செய்யப்பட்டுள்ளது)
( மதிய உணவு வழங்கப்படும் )பயிற்றுனர்: வானகம் ரமேஷ் மற்றும் வானக குழுவினர் .
பயிற்சியில் :
- ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
*இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
- ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி
பயிற்சி கட்டணம் : ₹ 500
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnaduவானகத்தில் 3 நாள் பயிற்சி – 19-21 Feb (2/14/2021)
வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை & வாழ்வியல் அறிமுக பயிற்சி பட்டறை
இப் பயிற்சியில் :
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும்.⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
⇒ பயிற்சி வருகிற 19 பிப்ரவரி 2021 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
⇒ 21 பிப்ரவரி 2021 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்
⇒ பயிற்சியில் குறைந்த 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)
⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள்
வங்கி கணக்கு விவரங்கள்
Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
⇒ முன்பதிவுக்கு: 9445879292 , 9566667708குறிப்பு :
வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்நன்றி .
வானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி (2/1/2021)
வானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி.
- வீட்டுத்தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தின் அவசியம் ?
- வீட்டுத்தோட்டத்தில் பாத்தி அமைக்கும் முறை
- மாடித்தோட்டம் பைகள் தயாரிப்பு
- மக்குஉரம் தயாரித்தல்
- விதைத்தேர்வு & விதை நேர்த்தி
- விட்டுத்தோட்டத்திற்கான இடுபொருள் தயாரிப்பு
பயிற்றுனர்: ச.சிவகாமி
நாள் : 06-02-2021 (சனிக்கிழமை)
நேரம் : காலை 9.00 to 4.00
தொடர்புக்கு : 9884708756/ 8610457700
30 நபர்கள் மட்டும். முன்பதிவு அவசியம்.
இடம் : Ecomwell sustainable farm
104, பூங்கா நகர், பொலிவாக்கம் பஞ்சாயத், அத்திக்குளம்,திருவள்ளூர்.- சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி Caterpillar நிறுவனம்.
- வலது புறம் ராகவா டிரேடர்ஸ் என்னும் கடையை ஒட்டி மண் சாலையில் நேராக வந்து பிறகு சாலையின் இறுதியில் இடதுபுறம் திரும்பினால் 100 மீட்டர் தூரத்தில்
பயிற்சி கட்டணம் : ₹ 750
உணவு வழங்கப்படும்.பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnaduவானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி (1/31/2021)
வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.
(திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டையில்)- ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
- இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
- ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி
பயிற்றுனர்: வெற்றிமாறன்.இரா &
வானகம் குழுவினர்நாள் : 06-02-2021 ( பிப்ரவரி 06 , சனிக்கிழமை )
நேரம் : காலை 9.00 to 4.00
தொடர்புக்கு : 8610457700 / 9445879292 .
இடம் : வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் , நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம் .
( மதிய உணவு வழங்கப்படும் )
பயிற்சி கட்டணம் : ₹500
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnaduஒருநாள் இயற்கைவழி வேளாண்மை அறிமுகப் பயிற்சி (1/27/2021)
கோவையில்…
வானகம் நடத்தும்
ஒருநாள் இயற்கைவழி வேளாண்மை அறிமுகப் பயிற்சி
31.01.2021
ஞாயிறு
09.00 am – 04.00 pmபயிற்றுனர்.
வானகம் ரமேஷ் & வானகம் குழுபயிற்சியில்,
ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?
இயற்கை இடுபொருட்கள் செய்முறைப் பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு
முன்பதிவு :
8489750624
9626092408பயிற்சி நன்கொடை : ரூ.500
(மதிய உணவு வழங்கப்படும்)இடம்:
செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை (1km from sulur BusStand),
கலங்கல் சாலை ,
சூலூர் ,
கோவை.பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டிய வாங்கி எண்:
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavur branch, Karur(Dt), Tamilnaduஇயற்கை உயிராற்றல் வேளாண்மை (Bio Dynamic farming) ஒருநாள் அறிமுக பயிற்சி (1/26/2021)
நம் வானகத்தில்
இயற்கை உயிராற்றல் வேளாண்மை (Bio Dynamic farming) ஒருநாள் அறிமுக பயிற்சி .
நாள் : 30-01-2021 (சனிக்கிழமை)நேரம் : காலை 9.00 to 5.00
🔄 ஜெர்மானிய அறிஞர் திரு.ருடால்ப் ஸ்டெய்னர் ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறைகள் மூலம் எவ்வாறு பிரபஞ்ச சக்தியும் மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களும் மறுபடியும் அதிக சக்திக்கான வளர்ச்சியை அடைகின்றன என்பதை நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இயற்கையின் ஐம்பூத ஆற்றல்களையும் ஊட்டமேற்றப்பட்ட உயிர் சக்தி நிறைந்த ஊட்டங்களை வேளாண்மையில் பயன்படுத்தும் நுட்பங்களின் முறைமையை உள்ளடக்கியதே இயற்கை உயிராற்றல் வேளாண்மை ஆகும் .
• உயிராற்றல் விவசாயத்தின் அடிப்படை யுக்திகள்
• கொம்பு சாண உரம் தயாரித்தல் மற்றும் பயன்பாடு
• சாண மூலிகை உரம் தயாரித்தல் மற்றும் பயன்பாடு
பயிற்றுனர் : ‘வானகம்’ மகேஷ் மெல்வின் ( உயிராற்றல் வேளாண்மை நிபுணர் )
பயிற்சி கட்டணம் : ₹ 1000/
( காலை மற்றும் மதிய உணவு தேநீர்
உள்பட )
முன்பதிவு அவசியம் : 8610457700 /
9445879292இடம் : வானகம் , சுருமான்பட்டி , கடவூர் கரூர் மாவட்டம் .
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnaduஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி (1/18/2021)
வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.
- ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
*இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
- ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி
பயிற்றுனர்: வானகம் ரமேஷ் .
நாள் : 24-01-2021
நேரம் : காலை 9.00 to 4.00
தொடர்புக்கு : 9445879292 / 8610457700
இடம் : நல்லமுத்து இயற்கை வேளாண் பண்ணை (கணேஷ்ராஜா பண்ணை) சிதம்பரம் நகர் , 1வது வார்டு கரையிருப்பு அஞ்சல் , திருநெல்வேலி மாவட்டம்.
பயிற்சி கட்டணம் : ₹ 500
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnaduபாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி (1/4/2021)
நாள் : 10-01-2021
நேரம் : 10.00 – 5.00
பயிற்றுனர் : பார்வதி நாகராஜன் ( மூலிகை ஆராய்ச்சியாளர் )● நம்மைச் சுற்றியிருக்கும் தாவரங்களில் மூலிகைத் தன்மை அறிதல்.
● மூலிகை தாவரங்களின் குணம் மற்றும் பயன்பாட்டு முறை அறிதல் .
● நமது வீட்டின் கால்நடைகளுக்கு மான மூலிகை மருத்துவம் செய்யும் முறையை அறிதல்.
● காட்டு மூலிகைகளும் அதன் பயன்பாடுகளும் குறித்த அறிதல்நாம் நம்மை சுற்றியிருக்கும் தாவரங்களையும் அதன் மூலிகை தன்மைகளையும் நாம் கண்டறிய தவறியதன் விளைவே வெளியிலிருந்து வரும் ரசாயனங்களை மாத்திரைகளை உடலில் செலுத்தி நம் உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை இழந்து வருகிறோம், இந்த அறியாமையிலிருந்து நாம் நம் தலைமுறையினர் விழிப்படையவும் வருங்கால சந்ததியினருக்கு நம் தாவரங்களின் மூலிகைத் தன்மை அதன் குணம் மற்றும் பயன்பாட்டு முறைகளை கற்றுச் சேர்க்கவும் நாமனைவரும் இணைய வேண்டிய காலகட்டம் இதுவே ஆகையால் நாம் நம் பாரம்பரிய மூலிகை அறிவை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் . நம் பாட்டி வைத்தியத்தின் மேன்மை அறிவோம்.
தன்னார்வலர்களுக்கான சேர்க்கை – ஜனவரி 2 (12/18/2020)
வானகத்தில் தன்னார்வலர்களுக்கான சேர்க்கை வரும் ஜனவரி 2 துவங்க உள்ளது.
“என்னுடைய நோக்கங்கிறது…இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும் “அது தான் வானகத்த மையமாவச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம்.
இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம் வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும். இப்படியான மானாவரி நிலமான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம், தனது உணவு உற்பத்தி மற்றும் பண்ணை ஆராய்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்ய பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, சரளைக் கற்களும் சுண்ணாம்பு குவியளுமாக கிடக்கும் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர வேளாண்மை, மானாவரி விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு, கால்நடை வளர்ப்பு, அனைத்தும் விதையில் இருந்து துளிர்ப்பது போல புதிய செயலாக்கமாக அமையவுள்ளது, இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்கையை விரும்பும் நண்பர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வானகம் அழைக்கிறது.இந்த பயிற்சியில் வேலையோடு கல்வியாக வானகம் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் பணியில் உயிர் வேலி அமைத்தல் தொடங்கி, உழவு, விதைத்தல், தினசரி பராமரிப்போடு, இயற்கையை கூர்ந்து கவனித்து காலநிலை மாற்றங்களோடு எவ்வாறு ஒரு உயிர் தன்னை தகவமைத்து வளர்கிறது, பூச்சிகள், நுண்ணுயிர் நமக்கு எவ்வாறு நண்பனாக இருக்கின்றன போன்றவைகளையும், விழிப்புணர்வோடு பதிவு செய்து, அறுவடை வரைக்குமான அணைத்து செயல்பாடுகளும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நடைபெறும்.கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து, “எல்லாமும் எல்லோருக்கும்” என்ற அடிப்படை புரிதலோடு இயங்குவோம், அது உணவில் தொடங்கி பொது வேலைகள், பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடு இயங்குவோம்.ஆசிரியர் மாணவர் மனநிலை உடைத்து கூடி கற்றலுக்கான தளமொன்றை அமைக்க விரும்பினார் அய்யா நம்மாழ்வார், அப்படியான தளத்தை அமைத்து கொடுக்க வானகம் மகிழ்ச்சியோடு உங்களை அழைக்கிறது, பண்ணை ஆராய்ச்சி மற்றும் உணவு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம். உணவு தங்குமிடம் வழங்கப்படும். தினசரி பண்ணை வடிவமைத்தல் மற்றும் உணவு உற்பத்திக்கு குறைந்த பட்சம் 5 மணி நேரம் உடல் உழைப்பு அவசியம்.மாதம் இரண்டு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.பயிற்சியில் பதினைந்து நபர்கள் மட்டுமே இணைய வாய்ப்புள்ளது.
2 ஜனவரி 2021 முதல் பயிற்சி தொடங்கவுள்ளது.
பயிற்சிக்கு நன்கொடை தர விரும்புவோர் செலுத்தலாம். >>அடையாள அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வரவும்.
விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யவும்.
தொடர்புக்கு : +919884708756