Events

Recent Events

  • நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா மரபு விதை திருவிழா (3/17/2023)

    நாள் : 06-04-2023
    வியாழக்கிழமை
    காலை 9 மணி முதல் மாலை 5வரை

    இடம் : வானகம் “நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்”
    சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.

         நஞ்சில்லா உணவையும், ஆரோக்கியாமன சூழலையும் அனைத்துயிர்களுக்கு உறுதி செய்ய வேண்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே. அவர் விதைத்துச் சென்ற விதைகளை பல்கிப் பெருகி தினசரி பேசு பொருளாக உணவும், சூழலியலும் மாறி நிற்கிறது.
    
         உணவு உற்பத்தியில், அனைவருக்கும் உணவு உத்திரவாதம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் மானாவாரி உழவர்களை ஒருபடி மேலே உயர்த்துவது தான் தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார், அதன் தொடர்ச்சியாகத் தான் #வானகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இருந்து வருகிறது, இப்படி சூழலியல், கல்வி, மருத்துவம் என எண்ணற்ற மாற்றங்களையும், முன்னோர்கள் உழைப்பின் அறுவடையும் நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம், அதை நினைவு கூறும் விதமாக தான் வருடத்தில் இரண்டு முறை வானகத்தில் கூடுகிறோம், வரும் ஏப்ரல் ஆறாம் தேதியும் கூட இருக்கிறோம்.
    
        அந்த நிறைவான நாளில் உழவு, சூழலியல், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் இந்தச் சமூகம் பயனுற வாழும் நன் நெஞ்சங்களை அறிமுகம் செய்து பாராட்டியும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறோம். 
    
         நம்மாழ்வாரின் பிறந்த நாளை மரபு விதைத்திருவிழாகவும் கொண்டாடி வருகிறோம், மரபு விதைக் காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் பாராட்டும் பொருட்டும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது, இந்த ஆண்டும் வழக்கம் போல மரபு இசை, மரபு கலைகளோடு அனைவரும் கூடி உறவாடுவோம், உரையாடுவோம். 

    மரபு விதைக் கண்காட்சி :
    வழக்கம் போல் இந்தாண்டும் விதைக்கண்காட்சியில் சிறு தானியங்கள் விதை, 1200க்கும் மேற்பட்ட மரபு நெல்ரகங்கள், காய்கறி ரகங்கள், கிழங்கு வகைகள், மூலிகைகள், பயறு, எண்ணெய் வித்துக்கள் விதை காட்சிப்படுத்துதல் நடைபெறுகிறது.

      இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர். Dr.மார்கண்டன் முன்னாள் துணை வேந்தர், காந்தி கிராம பல்கலைகழகம் அவர்களும், முன்னோடி உழவர்களும், விதை சேகரிப்பாளர்களும், சுற்றுச் சூழலியலாளர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள்.
    
         மேலும் மக்கள் பங்களிப்போடு கூடிய நம்மாழ்வார் விருது ஆண்டு தோறும் உழவு, சூழல், மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக செயலாற்றும் நண்பர்களுக்கு நம்மாழ்வார் விருதும், மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு தொகையும் வழங்குவது சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது, இந்த ஆண்டும் மக்களின் பங்களிப்போடு விருதுகள் வழங்க இருக்கிறோம். 
    
       தாங்கள் பங்களிக்க விரும்பும் தொகையை, இந்த வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த தகவலை எங்களுக்கு WhatsApp / Email மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Nammalvar Ecological Foundation
    A/C No : 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank : Indian Overseas Bank
    Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu
    +9194458 79292 , 86680 98492, 86680 98495
    info@vanagam.org

    அனைவரையும் அன்போடு வானகம் அழைத்து மகிழ்கிறது.
    நன்றி

    வானகம்

  • நம்மாழ்வார் ஐயாவின்
    9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
    (12/23/2022)

    நம்மாழ்வார் ஐயாவின்
    9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

            வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவுகளோடு இயற்கை வழி வேளாண்மை, விதைகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், சூழலியல் செயல்பாடுகள் என பல செயல்பாடுகளும் முன்னெடுக்கப் படுகிறது.

          இந்நிகழ்வில் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமான முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள், நண்பர்கள், களப்பணியாளர்கள் என  பலரும் கலந்து கொண்டு மக்களுக்கான பணியை செய்துவருகிறோம்.

         அதன்படி வருகிற ஜனவரி 1, 2023ல் ஐயா நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவேந்தல் வானகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி நிரல் :

    =>இசை நிகழ்ச்சி.

    =>கலை நிகழ்ச்சி.

    =>பார்வையாளர்கள் பங்கேற்பு நாடகம்.

    =>சிறுதானிய உணவு (மதிய உணவு).

    =>விவசாயிகள் அனுபவ பகிர்வு.

    =>நண்பர்களுடன் கலந்துரையாடல்.

    => விதை கண்காட்சி.

    =>மூலிகை கண்காட்சி.

    => பண்ணை விளைபொருட்கள் கண்காட்சி.

    =>நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனை.

    =>இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை

    நிகழ்வு நாள் : 1-1-2023
    நேரம் : காலை 9மணி முதல் மாலை 5மணி வரை

    நிகழ்விடம் :

    வானகம் – நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,
    சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்-621311.
    https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

    தொடர்புக்கு :
    +91 866809849286680984959445879292

    நன்றி.
    வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • மாற்றத்தை_நோக்கி இணைய வழி அமர்வு – 28 உரை : திரு. இளங்கோ கல்லானை (5/20/2022)

    வானகம் (#நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்) ஒருங்கிணைக்கும்

                                                                                                                               
             

    மாற்றத்தை_நோக்கி இணைய வழி அமர்வு – 28

    உரை : திரு. இளங்கோ கல்லானை
    ( முன்னோடி இயற்கை வழி உழவர், சமூக செயற்பாட்டாளர்)

      M.phil english படித்த இளங்கோ அவர்கள் 12 ஆண்டுகள் ஐ.டி துறையில் வேலை செய்துவிட்டு இயற்கை வேளாண்மை தான் வாழ்வை முழுமையாக்கும் என்பதை உணர்ந்து தான் செய்த வேலையை உதறினார்.  
               பின்னர்  மதுரை நரசிங்கம்பட்டி கிராமத்திற்கு திரும்பி முழுநேர இயற்கை உழவராக 15ஆண்டுகளாக வேளாண்மை செய்துவருகிறார். பாரம்பரிய நெல், வாழை, காய்கறி, கால்நடைகள் என ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பொருளை தானே மதிப்புகூட்டி சந்தைப்படுத்துகிறார்.
         இளங்கோவின் தந்தை திரு.கல்லானை அவர்கள் நம்மாழ்வார் ஐயாவின் தளபதியாக தென் மாவட்டங்களில் நீண்ட காலங்களுக்கு வேலை செய்தவர். 
    
             மேலும் திணையில் கோட்பாடுகள், சித்த மருத்துவம், நகரத்தார் சமூகம், கல்விமுறை பற்றிய பல ஆய்வுகளை முன்னெடுத்து பதிவு செய்தும் வருகிறார். 
              ஜல்லிகட்டு மற்றும் சுற்றுசூழல் சார்ந்த பல களபோராட்டாங்களில்  ஈடுபட்டு மண்ணைக்காத்து வருகிறார்.
    
     தன் மனதில் படும் அனைத்தையும் வெளிப்படையாக பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருபவர். அமெரிக்காவின் பொது பள்ளி கல்வி துறையின் பாடத்திட்ட குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார். 
    
      சிறந்த ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும் , சமூக செயற்பாட்டில் தனக்கென தனி பாதை அமைத்துக்கொண்டும் பயணித்து வருகிறார். 
    
       இலங்கையில் தற்போது நிகழும்  பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணம் இயற்கை வேளாண்மை தான் என்று பொய்பிராச்சாரம் செய்பவர்களுக்கு தகுந்த சான்றுகள் மூலம் சம்பவங்களை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார். 
    
    
      இவ்வாறு பலதரப்பட்ட சமூக மாற்றங்களை செய்து வரும் திரு.இளங்கோ கல்லானை அவர்கள் 21.05.2022 அன்று மாற்றத்தை நோக்கி  இணைய வழி அமர்வு - 28 ல் நம்முடன் இணைய வருகிறார். 

    நாள் : 21.05.2022

    சனிக்கிழமை இரவு 07.00 – 08.30

    • * Zoom meet link :
      https://zoom.us/j/9439607493?pwd=ZGlQQmoyQkRkK2hLUFdSU2FneXRmdz09 Meeting ID: 943 960 7493
      Passcode: VANAGAM

    Facebook page live link :

    https://www.facebook.com/vaanagam

    முதலில் இணையும் 100 நபர்களுக்கு மட்டுமே zoom meeting ல் இடம் உள்ளது. அதன் பிறகு இணைய விரும்பு நண்பர்கள் facebook live மூலம் கலந்துக்கொள்ளலாம்.
    *

  • பௌர்ணமி குடும்ப கூடல் திருவிழா – 20.09.2021 (9/17/2021)

    🌱வானகம் நிகழ்த்தும் 🌱⚪ *பௌர்ணமி குடும்ப கூடல் திருவிழா*

    ⚪இனி வரும் ஒவ்வொரு பௌர்ணமி இரவும் ஐயா நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமானோர் வானகத்தில் ஒன்று கூடி நிலாச்சோறுடன் இசை , நாடகம் , மரபு விளையாட்டு , மரபு வேளாண் வரலாறு , கதையாடல் என நண்பர்கள் கூடி உரையாடுவோம் .துவக்க விழாவாக 20-09-2021 திங்கள் இரவு 6.00 ல் பெருங்கதையாடலாக “மரபு குடிகளின் வேளாண் வரலாறு” குறித்த கதையாடலை பகிர்ந்து ” *எழுத்தாளர் சோ.தர்மன்* ” அவர்கள் நிகழ்வை துவக்கி வைக்கிறார் .முழு நிலவொளியில் கூடி இசை , நாடகம் , மரபு விளையாட்டுகள் , கதையாடல் , வேளாண் வரலாறு என உரையாடி விளையாடி நிலவொளியில் நினைவோம் . குடும்பங்களோடு விருப்ப உணவெடுத்து வாருங்கள் நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து உண்போம் … படர்ந்து உரையாடுவோம்…

    முன் பதிவிற்கு : 9445879292 .

  • வானகத்தில் 3 நாள் பயிற்சி – 5-7 March (2/28/2021)

    வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை & வாழ்வியல் அறிமுக பயிற்சி பட்டறை

    இப் பயிற்சியில் :
    ↣ இயற்கை வழி வேளாண்மை
    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
    ↣ மழை நீர் அறுவடை
    ↣ உயிர்வேலி
    ↣ ஒருங்கிணைந்த பண்ணை
    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
    ↣ களப்பயிற்சி
    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
    ↣ கால் நடை பராமரிப்பு
    ↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
    ↣ மரபு விளையாட்டு
    ஆகியவை இடம்பெறும்.

    ⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
    ⇒ பயிற்சி வருகிற 5 மார்ச் 2021 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
    ⇒ 7 மார்ச் 2021 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
    ⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்
    ⇒ பயிற்சியில் குறைந்த 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
    ⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)
    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள்
    வங்கி கணக்கு விவரங்கள்
    Nammalvar Ecological Foundation
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

    ⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
    ⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    ⇒ முன்பதிவுக்கு: 9445879292 , 8825810072

    குறிப்பு :
    வெளியிலிருந்து கொண்டுவரும்
    ⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
    பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்

    நன்றி.

  • வானகத்தில் நம்மாழ்வாரின் 6ம் ஆண்டு நினைவேந்தல் அழைப்பு (12/19/2019)

    வானகத்தில் நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் அழைப்பு

    நாள்: 1 ஜனவரி 2020

    இடம்: வானகம்,
    நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்
    சுருமான்பட்டி, கடவூர், கரூர்.

    கடந்த முப்பது ஆண்டுகளாக உலகெங்கும் ஒலித்த ஒற்றை வார்த்தை புவிவெப்பமடைதல், கடந்த சில வருடங்களாக அதையும் கடந்து சில வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, அது பல்வேறு நாடுகளில் அரசையும் மக்களையும் உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி இருக்கிறது, அனைத்து மட்டத்தில் உள்ள மக்களையும் அதிகாரிகளையும் நிலைகுலையச் செய்யும் அந்த வார்த்தைகள் ” Climate crisis, Climate catastrophe, Climate emergency, Climate strike”.

    பாரபட்சமின்றி எல்லா உயிருக்கும் ஒரு காலக் கெடுவை வைத்தப் பெருமை மனித இனத்தின் நுகர்வுக்கும் அதை மையமாக வைத்து இயங்கும் வணிக சந்தைக்கும் பெரும் பங்குண்டு.

    கடந்த சில வருடங்களாகவே நாம் சந்தித்து வரும் சூழலியல், நீராதார மற்றும் விதைப் பன்மைய சிக்கல்களுக்கு தீர்வு தான் என்ன?

    அதுவே இந்த நினைவேந்தல் கூட்டத்தின் கருப்பொருளாக திட்டமிட்டுள்ளோம்.

    மூன்று ஆளுமைகள் நம்முடன் உரையாடவும், வழிகாட்டவும் வருகிறார்கள்.

    தன் வாழ்நாளின் பெரும் பகுதியை 1400 க்கும் மேற்பட்ட விதை நெல்லை காத்து, பன்மடங்காக பெருக்கி, பரவலாக்கி வரும் அருமை தோழர்.

    தேபால் தேப்
    மரபு விதை நெல் காப்பாளர்
    வசுதா பண்ணை
    கொல்கத்தா

    காந்திய செயற்பாட்டாளர் பல்வேறு வகையில் மக்களுடனும், அரசாங்கத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டு வேளாண்மை, சூழல், காந்திய சிந்தனைகளை ஆழக்காலிட்டு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கும்

    ராமசுப்பிரமணியன்
    தர்மா இன்ஸ்ட்டியூட்
    சென்னை

    தண்ணீர் தண்ணீர் தண்ணீர் என தண்ணீரை மூச்சாக கொண்டு களத்திலும், அறிவுத்தளத்திலும் தன்னை கரைத்துக் கொண்டு செயலாற்றும்

    பேராசியர் ஜனகராஜன்,
    சென்னை.

    நினைவேந்தல் நாளுக்கு முந்தைய நாளான
    31 டிசம்பர் 2019 அன்று ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்கிறோம்.

    ராமசுப்பிரமணியன் மற்றும் தேபால் தேப் அவர்களுடன் அமர்வுகள் இருக்கும். சூழலியல் மற்றும் விதைக் காப்பாள நண்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள் என்வதில் ஐயமில்லை, கேள்விகளோடு தயாராகுங்கள்.

    கலை நிகழ்ச்சிகள்
    நாடகங்கள்
    அனுபவப் பகிர்வுகள்

    ஆண்டின் முதல் நாள் நம்மாழ்வாரின் நினைவேந்தலன்று ஒருமித்த கருத்தோடு சில கருத்தாக்கத்தை மனதிற் கருக்கொண்டு உறுதியேற்று எப்போதும் போல களத்தில் நிற்போம், மேலும் தெளிந்த கண்ணோட்டத்தில் வினைபுரிவோம்.

    தனது விரிந்த கரங்கலோடும், அன்போடும் வானகம் அழைக்கிறது, அனைவரும் ஒன்று கூடுவோம்.

    தொடர்புக்கு
    9445968500
    9445879292

  • நம்மாழ்வாரின் 81 வது பிறந்தநாள் விழா (3/22/2019)

    நம்மாழ்வாரின் 81 வது பிறந்தநாள் விழா
    மரபு விதை திருவிழா அழைப்பு.

    நாள்
    06-04-2019
    சனிக்கிழமை
    காலை 9 மணி முதல்

    இடம்
    வானகம்
    நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்
    சுருமான்பட்டி, கடவூர், கரூர்.

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

    நஞ்சில்லா உணவையும், ஆரோக்கியாமன சூழலையும் அனைத்துயிர்களுக்கு உறுதி செய்ய வேண்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே, அவர் விதைத்துச் சென்ற விதைகளை பல்கிப் பெருகி தினசரி பேசு பொருளாக உணவும், சூழலியலும் மாறி நிற்கிறது.

    உணவு உற்பத்தியில், அனைவருக்கும் உணவு உத்திரவாதம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் மானாவாரி உழவர்களை ஒருபடி மேலே உயர்த்துவது தான் தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார், அதன் தொடர்ச்சியாகத் தான் வானகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இருந்து வருகிறது, இப்படி சூழலியல், கல்வி, மருத்துவம் என எண்ணற்ற மாற்றங்களையும், முன்னோர்கள் உழைப்பின் அறுவடையும் நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம், அதை நினைவு கூறும் விதமாக தான் வருடத்தில் இரண்டு முறை வானகத்தில் கூடுகிறோம், வரும் ஏப்ரல் ஆறாம் தேதியும் கூட இருக்கிறோம்.

    அந்த நிறைவான நாளில், உழவு, சூழலியல், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் இந்தச் சமூகம் பயனுற வாழும் நன் நெஞ்சங்களை அறிமுகம் செய்து பாராட்டியும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

    நம்மாழ்வாரின் பிறந்த நாளை மரபு விதைத்திருவிழாகவும் கொண்டாடி வருகிறோம், மரபு விதைக் காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் பாராட்டும் பொருட்டும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது, இந்த ஆண்டும் வழக்கம் போல மரபு இசை, மரபு கலைகள் மற்றும் நாடகத்தோடு அனைவரும் கூடி உறவாடுவோம், உரையாடுவோம்.

    மக்கள் பங்களிப்போடு கூடிய நம்மாழ்வார் விருது.

    ஆண்டு தோறும் உழவு, சூழல், மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக செயலாற்றும் நண்பர்களுக்கு நம்மாழ்வார் விருதும், மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு தொகையும் வழங்குவது சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது, இந்த ஆண்டும் மக்களின் பங்களிப்போடு விருதுகள் வழங்க இருக்கிறோம்.

    தாங்கள் பங்களிக்க விரும்பும் தொகையை, இந்த வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த தகவலை எங்களுக்கு WhatsApp / Email மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Nammalvar Ecological Foundation
    A/C No : 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank : Indian Overseas Bank
    Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu

    +919994277505 – +919488055546
    info@vanagam.org

    அனைவரையும் அன்போடு வானகம் அழைத்து மகிழ்கிறது.

    நன்றி
    வானகம்

  • Vanagam - Children Program for 21-27 May 2018 7 Day Children Program from 21st to 27th May 2018 (4/26/2018)

    Vanagam is conducting a 7 Day Children Program from 21st to 27th May 2018.

    வானகத்தில் குழந்தைகள் கொண்டாட்டம்

    2018 மே 21 திங்கள் முதல் 27 ஞாயிறு வரை

    குழந்தைகளுக்கு கடந்த காலத்தை குறித்தோ, எதிர்காலத்தை குறித்தோ எந்த கவலையுமில்லை,
    வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், அவர்களுக்கான உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வாழ்கின்றனர்.

    நிகழ்காலத்தில் வாழ்பவன் படைப்பாற்றல் நிறைந்தவனாக இருக்கிறான், ஒவ்வொரு நிமிடத்தையும் விழிப்போடு கவனித்து வாழ்கிறான், தான் எடுக்கும் முடிவில் உறுதியான மனத்துடன் பயணிக்கிறான்.

    சமூகத்தோடு சேர்ந்து இயங்கும் போது சமரசம் செய்யத் துவங்குகிறோம், அங்கிருந்து தான் நம் பாதையில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படுகிறது, சுமைகள் கூடிக் கொண்டே போகிறது, நம் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை முடிவெடுக்கும் இடத்திலிருந்து நாம் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறோம். நீண்ட போராட்டத்திற்கு பிறகே நாம் வாழ்வை வாழ்ந்தோமா, கழித்தோமா எனும் சிந்தனை பிறக்கிறது, அப்போது தான் நம் சந்ததிகளுக்கு இந்தச் சுமையை, சமரசமான மேம்போக்கான வாழ்வை விட்டுச் செல்லாமல் இருக்க என்னவெல்லாம் தேவை எனத் தேடுகிறோம்.

    நமது எண்ணங்கள் அறம் சார்ந்து வலுப்பெறும்பொழுது வாழ்வு பகிர்ந்தளிக்கும் குணமாக, மகிழ்ச்சி கொண்டதாக, கொண்டாட்டம் நிறைந்ததாக காட்சியளிக்கும்.

    அறம் சார்ந்த தற்சார்பு வாழ்க்கை முறையின் கூறுகளை அவர்களின் மனத்துள் குழந்தை பருவத்திலேயே விதைத்து விட்டோமென்றால் அது வளர்ந்து மரமாக மாறும் பொழுது அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழலோடு, பகிர்ந்து வாழும் மாண்பு கொண்ட உலகமாக சுயமாகவே உருப்பெற்றுவிடும்.

    வானகம் அதற்கான சூழலை உருவாக்க காத்திருகிறது இணைந்து செயல்படுவது மட்டுமே நாம் செய்ய வேண்டியது.

    பயிற்சி நடைபெறும் இடம்
    ***************************
    வானகம்
    நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
    சுருமான்பட்டி
    கடவூர், கரூர்

    பயிற்சிக் கட்டணம் : ரூ. 2500/-
    ( தங்குமிடம், உணவு உட்பட )
    #8 வயது முதல் 14 வயது குழந்தைகள் மட்டும்
    பெற்றோர்கள் உடன் தங்க அனுமதி இல்லை, பயிற்சி முழுவதும் தங்கி தன்னார்வலர்களாக இணைந்து கொள்ள சிலர் மட்டும் இணைந்து செயல்படலாம்.

    20-05-2018 ஞாயிறு மாலை 6 மணிக்குள் குழந்தைகளை அழைத்து வரவும்.

    முன்பதிவு :

    9884708756 | 9944236236

    >நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :

    வங்கி கணக்கு எண் :

    Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .

    குறிப்பு :
    1. வெளியிலிருந்து கொண்டுவரும்
    ⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
    2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
    3. களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
    4. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்

  • nammalvar's 80th birthday celebration invite Nammalvar’s 80th Birthday Celebration at Vanagam (3/21/2018)

    Vanagam is celebrating Nammalvar’s 80th Birthday on April 6th 2018. We invite you to take part in honoring our special guests with the Nammalvar Award.

    ஐயா நம்மாழ்வாரின் பிறந்தநாளை பெண்களுக்கான சிறப்பு நிகழ்வாக மக்கள் அனைவரும் கூடி கொண்டாட வானகத்தின் அழைப்பு.

    நாள் : 6-4-2018
    வெள்ளி காலை 9 மணி முதல்

    இடம் : வானகம்
    நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்

    இந்தச் சமூகத்திற்கான உணவை உற்பத்தி செய்து பசிப்பிணியை போக்குவதில் பன்நெடுங்காலமாக எந்தவித பிரதிபலனுமின்றி, அயராது உழைத்து வருவது பெண்கள், அவர்களை கொண்டாடும் விதமாக நம்மாழ்வாரின் 80 வது பிறந்த நாளான 6-4-2018 வெள்ளிக்கிழமையன்று, வானகத்தில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

    சிறப்பு அழைப்பாளர்கள், நம்மாழ்வார் விருது பெறுவோர், விருதுகளை வழங்குவோர் என நிகழ்வு முழுக்க பெண்களுக்காக முன்னெடுப்போம்.

    நம்மாழ்வாரின் வாழ்நாள் நோக்கமான நஞ்சில்லா உணவு, மரபு வழி மருத்துவம், கல்வி, சூழலியல், தளங்களில் நீண்டகாலமாக இயங்கிவரும் பத்து பெண்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்க இருக்கிறோம்.

    மக்களின் பங்கெடுப்போடு நம்மாழ்வார் விருது
    ********************************************

    விருது வழங்குவதை ஒரு சடங்காக மாற்றாமல், அவர்கள் பணியை அங்கிகரிக்கும் விதமாக மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு ஒரு தொகையுடன் கூடிய விருது வழங்குவதென முடிவு செய்துள்ளோம்.

    உங்களின் பங்களிப்பு சமூக செயற்பாட்டாளர்கள் தனித்து இல்லை என்ற உணர்வையும், தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட உந்து சக்தியாகவும் இருக்கும், சிறு தொகையாக இருந்தாலும் மக்களின் பங்களிப்போடு இதனை செய்வதில் வானகம் மகிழ்ச்சி அடைகிறது, பின்வரும் வங்கி கணக்கில் நீங்கள் அளிக்க விரும்பும் தொகையை செலுத்தி

    nammalvarecologicalfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 9994277505 / 9500765537 எண்ணிற்கு தெரியபடுத்தவும்.
    ரசீது அனுப்பி வைக்கப்படும்

    Nammalvar Ecological Foundation
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor branch, karur

    நன்றி
    வானகம்

  • Vanagam at Tirupur Book Fair 2018 Vanagam Participating in Thiruppur Book Festival 2018 (1/25/2018)

    வானகம் பதிப்பகம்

    திருப்பூர் புத்தகத் திருவிழாவில்

    அரங்கு எண் 132

    ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை

    **************************

    நம்மாழ்வாரின் புத்தகங்கள்

    சூழலியல் வேளாண் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள்

    வானகம் நாட்காட்டி 2018

    புகைப்படங்கள்

    **************************

    பத்மினி கார்டன்
    காங்கேயம் சாலை
    திருப்பூர்

    8939005574 – 9488055546