Category Archives: Announcements

Vanagam – Gaja Cyclone Damage Photos

Vanagam – Gaja Cyclone Damage Photos

வானக நண்பர்களுக்கு வணக்கம். தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், வானகத்திலும் (16.11.2018) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயல் காற்றின் வேகத்தால், மாட்டுக் கொட்டகை தரை மட்டமாக முற்றிலும் சேதப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வந்த சோலார் மின் அமைப்பும் சுக்குநூறாக உடைந்து விட்டது. பயிற்சிக் குடிலும், நம்மாழ்வார் ஐயாவின் குடிலும் பலவீனமடைந்து விட்டது. நமது உழைப்பாலும், இயற்கையின் துணையாலும் நின்று இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. இதுவும் இயற்கையின் நியதி தான், இதையும் நாம் கடந்து செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி.  

Cancellation of 5-7 October Workshop

அனைவருக்கும் வணக்கம், வரும் மூன்று நாட்கள் 5,6,7 குறிப்பாக 7 (ஞாயிறு) ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையமும் அரசும் அறிவித்திருக்கும் நிலையில் அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை வானகத்தில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்புகள் 19, 20, 21- வெள்ளி, சனி, ஞாயிறு ஆக்டோபர் 2018 தேதிகளுக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். பயிற்சிக்கு வருவோர்களுக்கு எந்தவித அசௌகரியங்களும் ஏற்பட்டுவிடக் கூடாதென வானகம் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. சூழலைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி…. Continue reading »