Category Archives: Announcements

நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வு – 2019

நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான அனைவருக்கும் வணக்கம். நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வை ஜனவரி 1 அன்று எப்போதும் போல சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கஜா புயலின் தாக்கத்தால் 8 மாவட்டங்களில் பெரும் இழப்பை அனைத்துத் தரப்பும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் நம்மாழ்வாரின் நினைவு நாளைக் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் வருகை இன்றி பெரிய நிகழ்வாக நடத்தாமல் எளிய நினைவஞ்சலியாகக் காலை 10 மணி வரை… Continue reading »

மரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை. பெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன். நம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில் நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார். பாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது,… Continue reading »

Vanagam – Gaja Cyclone Damage Report

வானக நண்பர்களுக்கு வணக்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற்றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது. அவ்வாறு கிடைக்கபெற்ற… Continue reading »

Vanagam – Gaja Cyclone Damage Photos

Vanagam – Gaja Cyclone Damage Photos

வானக நண்பர்களுக்கு வணக்கம். தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், வானகத்திலும் (16.11.2018) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயல் காற்றின் வேகத்தால், மாட்டுக் கொட்டகை தரை மட்டமாக முற்றிலும் சேதப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வந்த சோலார் மின் அமைப்பும் சுக்குநூறாக உடைந்து விட்டது. பயிற்சிக் குடிலும், நம்மாழ்வார் ஐயாவின் குடிலும் பலவீனமடைந்து விட்டது. நமது உழைப்பாலும், இயற்கையின் துணையாலும் நின்று இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. இதுவும் இயற்கையின் நியதி தான், இதையும் நாம் கடந்து செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி.  

Cancellation of 5-7 October Workshop

அனைவருக்கும் வணக்கம், வரும் மூன்று நாட்கள் 5,6,7 குறிப்பாக 7 (ஞாயிறு) ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையமும் அரசும் அறிவித்திருக்கும் நிலையில் அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை வானகத்தில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்புகள் 19, 20, 21- வெள்ளி, சனி, ஞாயிறு ஆக்டோபர் 2018 தேதிகளுக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். பயிற்சிக்கு வருவோர்களுக்கு எந்தவித அசௌகரியங்களும் ஏற்பட்டுவிடக் கூடாதென வானகம் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. சூழலைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி…. Continue reading »