வானகத்தில் 3 நாள் பயிற்சி – 17-19 March

By   07/03/2023

வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 17.3.2023 முதல் 19.3.2023 வரை .

அடி காட்டுக்கு.
நடு மாட்டுக்கு..
நுனி வீட்டுக்கு…
கோ.நம்மாழ்வார்

நம்மாழ்வாரின் நோக்கங்கிறது…

இரசாயன யூரியாவில் 42% நைட்ரஜன் தான் உள்ளது. ஆனால் அண்டவெளியில் 78% நைட்ரஜன் உள்ளது. 

    ஆய்வு செய்து தக்கை பூண்டு, சணப்பு,கொத்தவரை போன்ற பல பயிறுவகைகளும், அகத்தி, சவுண்டால், கிளரிசிடியா போன்ற மர வகைகளும்,  கொளுஞ்சி, எருக்கு, நெய்வேலி காட்டாமணக்கு போன்ற செடிகள் உட்பட 12000 செடிகள், செடியின் வேரில் வாழும் நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை சேகரித்து தருகின்றன என்ற பட்டியலை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து பட்டியலிட்டுள்ளனர்.

     ஆக இந்த 12000 செடிகளையும், நுண்ணுயிர்களையும் அழித்தால் தான் இராசாயன உரங்கள் விற்கும். அதற்குத் தேவையானதை இந்திய விஞ்ஞானிகள் செய்து விட்டனர். ஆகவே தான்  இன்று உயிரினப் பன்மையம்பற்றி பேச வேண்டியிருக்கிறது. 

  ஆகையால் இக்கருத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நாம் அனைவருக்கும் உள்ளது. அதற்கு ஏற்ற பயிற்சிகளையும், மாதிரிப் பண்ணைகளையும், மனிதர்களையும் உருவாக்கும் முயற்சி “ #வானகம்” நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 

⇒ பயிற்சி வருகிற
17.3.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
19.3.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

வானகம் நடத்தும்

இப் பயிற்சியில் :
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)
⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation :
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

முன்பதிவு அவசியம்.
தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
முன்பதிவுக்கு அழைக்க : 8668098492, 8668098495, 9445879292

குறிப்பு :
⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,
வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app