ஒருமாத இயற்கை வேளாண்மை பயிற்சி

By   20/01/2023

வானகம் நடத்தும்

ஒருமாத இயற்கை வேளாண்மை

பயிற்சி :

நாள் : 28.1.2023 – 28.02.2023

இப் பயிற்சியில் :
⇒ ஆண்டு முழுவதற்குமான காய்கறி மற்றும் கீரை சாகுபடிகள்
⇒ நிரந்தர வேளாண்மை
⇒ வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம்
⇒ ஏர் உழவு
⇒ கால்நடை வளர்ப்பு , தேனீ வளப்பு
⇒ பூச்சிகள் & களை மேலாண்மை
⇒ வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு முறை
⇒ மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப் படுத்துதல்
ஆகியவை இடம்பெறும்.

பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.

தங்குமிடம் உணவு வழங்கப்படும்.
⇒ முன்பதிவு அவசியம்.

தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
பத்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.
முன்பதிவுக்கு: +91 95784 52993
Whatsapp அனுப்ப : +91 9445879292

வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி சனவரி 28, 2023 முதல் பிப்ரவரி 28, 2023 வரை நடைபெறுகிறது.

நன்றி
https://vanagam.org
https://vanagam.page.link/app