#நம்மாழ்வார் ஐயாவின் 9வது நினைவு நாள்
ஜனவரி 1, 2023ல் கரூர் மாவட்டம் கடவூர் #வானகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது..

இந்நிகழ்வில் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், முன்னோடி இயற்கை உழவர் பெருமக்கள், கடவூர் ஜமின்தார் மற்றும் உள்ளூர் பெருமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வு நம்மாழ்வார் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தி, இயற்கை வாழ்வியல் உறுதி மொழியோடு தொடங்கியது..
பின் பறையிசை முழங்க மீனா நம்மாழ்வார் அவர்கள் தன் தந்தையின் (ஐயாவின்) நினைவுகளோடு, குழந்தை வளர்ப்பு முறை பற்றியும் நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்..
அதன்பின் வானகத்தின் நோக்கம், செயல்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டது.
முன்னோடி இயற்கை உழவரும் ஐயாவின் நண்பருகளுமாகிய திருவாளர்கள் நசியனூர் மோகன சுந்தரம், கா. க. இரா. லெனின் மற்றும் செந்தில் நாயகம் ஆகியோர் மறைவை நினைவுக்கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் முன்னோடி உழவரும், அறிவர் பாரம்பரிய விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளரும் சித்த மருத்துவர் #சரவணன் அவர்களும் மற்றும் பல உழவர்களும் பாரம்பரிய நெல்லின் மருத்துவ பண்புகள் குறித்தும் விளக்கினார்கள்.
திரு. மருதையப்பன் அவர்கள் சிறு(கருந்)தானியங்களின் சிறப்பும், மருத்துவத் தன்மை குறித்தான அனுபவங்களை பகிர்ந்தார். மரம் தங்கசாமி அவர்களின் மகன் திரு.கண்ணன் அவர்கள் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பின் அவசியம் குறித்து பேசினார்.
#தன்னாட்சி அமைப்பின் திரு. நந்தகுமார் அவர்கள் கிராம மற்றும் நகர சபைகள் அதன் மூலம் மக்கள் அடையக்கூடிய பலன்கள் குறித்தான அனுபவங்களை பகிர்ந்தார்..
மேலும் #நிகர்-கலைக்குழவின் பறையிசை மற்றும் சிந்தனை தூண்டும் சமூக நாடகமும்… சமூகத்தில் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிராக இன்று நடக்கும் தாக்குதல் குறித்தான #பாரதி_கண்ணன் குழுவினரின் மக்கள் பங்கேற்பு விழிப்புணர்வு நாடகமும், மரபு கருவிகள் பயன்படுத்தி தொல்லிசை பயணி சவுண்ட் #மணி அவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
லெமூரியா வர்மக்களரி அடிமுறை சிலம்ப கூட்டமைப்பு சார்பாக சிறுவர்கள் மாணவர்களின் சிலம்பம், ஈட்டி , வாள்வீச்சு விளையாட்டுக்கள் நிகழ்ந்தது .
மேலும் முன்னோடி உழவர்கள் உற்பத்தி செய்த & சேகரித்த மரபு விதைகளின் கண்காட்சியை அறிவர் விதை வங்கி, காட்டுயானம் கரிகாலன், சிவகாசி தேன்கனி உழவர் குழுவினர் & #தமிழ்நாடுவிதைசேகரிப்பாளர்கள்_கூட்டமைப்பு……. குழுவினர் என அனைவரும் இணைந்து பல அறிய ரக விதைகளை காட்சிபடுத்தப் படுத்தினார்கள்.
#தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மரபு நாட்டு காய்கறி விதைகள் பகிரப்பட்டது .
மேலும் #சித்தமருத்துவர் திரு. அன்புச்செழியன் அவர்கள் மூலிகைகள் கண்காட்சியும், வீட்டு கழிவுகளை எளிமையாக உரமாக்கும் தொழில்நுட்பதை திரு.இஸ்மாயில் அவர்களின் விளக்கமும், மாதிரிகளும் காட்சிபடுத்தப் பட்டது.
#வானகம் பண்ணையை பார்வையிடல், பண்ணையில் விளைந்த இயற்கை வழி உணவுப் பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பலரும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
காலை, மதியம் இயற்கை உணவுகளை திரு.அங்கப்பன் ஐயா & சாரதி குழுவினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வுகளை வானகம் குழுவினர் & தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாக வழிநடத்தினார்கள்..
நம்மாழ்வார் ஐயாவின் நோக்கத்தை அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம். அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுப்போமாக..
நன்றி..