மாற்றத்தை_நோக்கி இணைய வழி அமர்வு – 28 உரை : திரு. இளங்கோ கல்லானை

By   20/05/2022

வானகம் (#நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்) ஒருங்கிணைக்கும்

                                                              
     

மாற்றத்தை_நோக்கி இணைய வழி அமர்வு – 28

உரை : திரு. இளங்கோ கல்லானை
( முன்னோடி இயற்கை வழி உழவர், சமூக செயற்பாட்டாளர்)

 M.phil english படித்த இளங்கோ அவர்கள் 12 ஆண்டுகள் ஐ.டி துறையில் வேலை செய்துவிட்டு இயற்கை வேளாண்மை தான் வாழ்வை முழுமையாக்கும் என்பதை உணர்ந்து தான் செய்த வேலையை உதறினார். 
      பின்னர் மதுரை நரசிங்கம்பட்டி கிராமத்திற்கு திரும்பி முழுநேர இயற்கை உழவராக 15ஆண்டுகளாக வேளாண்மை செய்துவருகிறார். பாரம்பரிய நெல், வாழை, காய்கறி, கால்நடைகள் என ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பொருளை தானே மதிப்புகூட்டி சந்தைப்படுத்துகிறார்.
   இளங்கோவின் தந்தை திரு.கல்லானை அவர்கள் நம்மாழ்வார் ஐயாவின் தளபதியாக தென் மாவட்டங்களில் நீண்ட காலங்களுக்கு வேலை செய்தவர். 

     மேலும் திணையில் கோட்பாடுகள், சித்த மருத்துவம், நகரத்தார் சமூகம், கல்விமுறை பற்றிய பல ஆய்வுகளை முன்னெடுத்து பதிவு செய்தும் வருகிறார். 
     ஜல்லிகட்டு மற்றும் சுற்றுசூழல் சார்ந்த பல களபோராட்டாங்களில் ஈடுபட்டு மண்ணைக்காத்து வருகிறார்.

 தன் மனதில் படும் அனைத்தையும் வெளிப்படையாக பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருபவர். அமெரிக்காவின் பொது பள்ளி கல்வி துறையின் பாடத்திட்ட குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார். 

 சிறந்த ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும் , சமூக செயற்பாட்டில் தனக்கென தனி பாதை அமைத்துக்கொண்டும் பயணித்து வருகிறார். 

  இலங்கையில் தற்போது நிகழும் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணம் இயற்கை வேளாண்மை தான் என்று பொய்பிராச்சாரம் செய்பவர்களுக்கு தகுந்த சான்றுகள் மூலம் சம்பவங்களை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார். 


 இவ்வாறு பலதரப்பட்ட சமூக மாற்றங்களை செய்து வரும் திரு.இளங்கோ கல்லானை அவர்கள் 21.05.2022 அன்று மாற்றத்தை நோக்கி இணைய வழி அமர்வு - 28 ல் நம்முடன் இணைய வருகிறார். 

நாள் : 21.05.2022

சனிக்கிழமை இரவு 07.00 – 08.30

 • * Zoom meet link :
  https://zoom.us/j/9439607493?pwd=ZGlQQmoyQkRkK2hLUFdSU2FneXRmdz09 Meeting ID: 943 960 7493
  Passcode: VANAGAM

Facebook page live link :

https://www.facebook.com/vaanagam

முதலில் இணையும் 100 நபர்களுக்கு மட்டுமே zoom meeting ல் இடம் உள்ளது. அதன் பிறகு இணைய விரும்பு நண்பர்கள் facebook live மூலம் கலந்துக்கொள்ளலாம்.
*