நம் வானகத்தில் ” குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் 22-5-22 முதல் 29-5-22 ” நடக்கவுள்ளது.

By   16/05/2022

நம் வானகத்தில்

” குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் 22-5-22 முதல் 29-5-22 ” நடக்கவுள்ளது.

மழலைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வியலில் கலந்து களித்திட.. வான் பார்த்தல்… வனம் பார்த்தல்… நீர் பார்த்தல்… நிலம் பார்த்தல்… செடி வளர்த்தல் , மரம் அறிதல், பொம்மைகள் செய்தல் , கதை சொல்லிகளோடு கதையாடல் , மரபு விளையாட்டுகளை விளையாடி மகிழ்தல் , பனையோலை மடிப்பு கலை செய்தல் , மரபு கலைகளான சிலம்பம் சுத்துதல் பறையிசைத்தல், குழந்தைகளுக்கான திரைப்பட திரையிடல் , கூத்து நாடகம் நடித்தல் , இயற்கை உணவுகளோடு அதன் உன்னதத்தை உணர்தல் ரசித்தல் என மழலைகள் தங்களின் விடுதலையை உணர்ந்திடவும் தன்னியல்போடு கொண்டாடிடவும் கூடிடுவோம்..


மே 22 , ஞாயிறு காலை 10 மணி முதல்
மே 29 ஞாயிறு மாலை 5 மணி வரை

பயிற்சி நடைபெறும் இடம் : வானகம் – நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .

பயிற்சிக் கட்டணம் : ரூ.3500 –
( எளிமையான தங்குமிடம் & சத்துமிகு இயற்கை உணவுகள் உட்பட )

8 வயது முதல் 14 வயது குழந்தைகள் மட்டும்

பெற்றோர்கள் உடன் தங்க அனுமதி இல்லை, பயிற்சி முழுவதும் தங்கி தன்னார்வலர்களாக இணைந்து கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் அனுமதி உண்டு.

முன்பதிவு : 8668098492 , 8668098495

பயிற்சிக்கு வரும்போது புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் .
நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கி கணக்கு எண் :
Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .

பணம் செலுத்தியவுடன் தங்கள் முகவரி மற்றும் பணம் செலுத்திய விபரத்தை 8668098492 , 8668098495 இந்த கைபேசிக்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது whatsappற்கு அனுப்பவும்.

நிகழ்ச்சியில் :
இயற்கை வழி விவசாயம் , வீட்டுத்தோட்டம், பாரம்பரிய மருத்துவம், இயற்கை உணவு தயாரிப்பு, மரபு விளையாட்டுகளுடன் கூடிய நாடக பயிற்சி, சிலம்பம், ஒயில் , யோகா, மற்றும் இயற்கையின் நுண்ணுணர்வை நோக்கிய கலந்துரையாடல்களும் , அறிவியல் அறிதல் செய்முறைப் பயிற்சியும் நடைபெறும்.

            வெறும் நகரச் சூழலின் சத்தங்களையே கேட்டு வளர்ந்த நம் குழந்தைகளை சிலம்பின் வீச்சும், சலங்கையின் வெண்கல ஒலியும், ஒயிலாட்டம் மற்றும் பறையின் அதிர்வும், கரகத்தின் மெல் அசைவும் இப்பிரபஞ்சத்தின் சுயமான அக மன கொண்டாட்டத்தை நோக்கி கட்டாயம் கைபிடித்து கூட்டிச்செல்லும் அதன் கதகதப்பில் நம்மாழ்வார் அய்யாவின் இருப்பை அனைவரிடத்திலும் உணரலாம்.

குறிப்பு :

  1. வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது , பாலித்தின் பைகள், சோப்பு , ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
  2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
    3.களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
  3. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதல் வழங்கப்படும்.

https://vanagam.org
https://vanagam.page.link/app