வானகம் – தாய்மண் உழவர் சந்தை இணைந்து நடத்தும் செய்முறையுடன் கூடிய வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி முகாம் – 02.04.2022

By   29/03/2022

வானகம் – தாய்மண் உழவர் சந்தை இணைந்து நடத்தும் செய்முறையுடன் கூடிய வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி முகாம் – 02.04.2022

ஒரு நாள் பயிற்சியாக சென்னையில் முகப்பேரில் ஏப்ரல் 2 – 2022 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெறுகிறது.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் +91 98847-08756 எண்ணிற்கு தங்கள் வருகையை வாட்ஸ்அப் செய்தி மூலம் உறுதி செய்யவும்.

பயிற்சியில் வீட்டுக்கு தேவையான காய்கறி, கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யவும், மாடித்தோட்டதை இன்று உள்ள பருவ நிலைக்கு ஏற்றவாறு எப்படி வடிவமைப்பது என்பது குறித்தும் செய்முறை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை , வீட்டு கழிவுகளை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி, கீரை, பூ மற்ற பயிர்கள் கொண்டு தேவையை பூர்த்தி செய்துகொள்ளவது எப்படி என்பதை செய்து பார்ப்போம்.

பயிற்சி:
✓ ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
✓ அன்றாடம் நாம் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுகளைக் கொண்டு மக்கு உரம் தயாரித்தல்
✓ நிரந்தர வேளாண்மை கூறுகள் மற்றும் அடிப்படை தத்துவம்
✓ சூழலுக்கு ஏற்றவாறு மாடி தோட்டம் வடிவமைப்பு – செய்முறை
✓ மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
✓ விதைகள் சேகரிப்பது
✓ விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
✓ பூச்சி மேலாண்மை
✓ பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
✓ பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்

பயிற்சியின் போது மதிய உணவு மற்றும் தேனீர் வழங்கப்படும்.

பயிற்சிக்கான பங்களிப்பாக ரூ. 500 செலுத்த வேண்டும்.

தொடர்பு எண் : சிவகாமி – +91 98847-08756

இடம்:
1140 , 20வது தெரு , வெஸ்ட் எண்ட் காலனி , அண்ணா நகர் வெஸ்ட் எக்ஸ்டேன்ஷன் , சென்னை 600050.

https://goo.gl/maps/BfSfeeq7dCXeMWfv9