வானகம் நடத்தும் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ ஒரு நாள் பயிற்சி (13.10.2021)

By   08/10/2021

வானகம் நடத்தும் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ ஒரு நாள் பயிற்சி

 இயற்கை வழி வேளாண்மை என்பது இயற்கையின் சுழற்சி களை முறையாக பயன்படுத்துவதே ஆகும்.    
 மேல் மட்டத்தின் கழிவு கீழ் மட்டத்தின் உணவு என்பது அடிப்படைத் தத்துவம். கழிவுகள் என்பது இடம் மாறி கிடைக்கும் ஆதாரங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
  உணவுச் சங்கிலியில் ஒன்றை ஒன்று இணைப்பதற்கான அறிவை பெறுவதே நுட்பமாகவும் இருக்கிறது‌.
   ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது இயற்கையின் சுழற்சி களையும் ஆற்றலையும் முறையாக பயன்படுத்துவதை குறிக்கும். 
  இந்த பயிற்சி இயற்கை வேளாண்மை முறையில் தற்சார்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நண்பர்களுக்கானது. 
  பண்ணையில் இருக்க வேண்டிய முக்கிய தேவைகள், பண்ணை வடிவமைப்பு, கால்நடை பராமரிப்பு, பண்ணையில் இருந்து வருவாய் ஈட்டும் வழிகள், பண்ணையில் இருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகள் அனைத்தையும் தெரிந்துக் கொள்ளலாம். 

முன்பதிவு செய்ய : +91 95666 93945

பயிற்சி பங்களிப்பு : 750/-

  நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

குறிப்பு : அரசு அறிவுருத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.
வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி

 போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. 

இடம் :
வானகம்,
சுருமான்பட்டி,
கடவூர்,
கரூர் – 621311.