விதைகளே பேராயுதம் – ஒரு நாள் பயிற்சி அகஸ்ட்-22-2021.

By   20/08/2021

‘ விதைகளே பேராயுதம் ‘ என்ற தலைப்பில் வானகம் முன்னெடுத்திருக்கும் ஒரு நாள் விதைகள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 14,15 – 2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட நபர்களுடன் இனிதாக நிகழ்ந்தேரியது.

இதில் கலந்து கொண்ட நண்பர்கள் விதைகளை பற்றி மட்டும் இல்லாமல் ஒரு விதையை விதைப்பது முதல் அந்த விதையிலிருந்து அடுத்த விதையை உற்பத்தி செய்யும் நுட்பம் வரை உள்ள பல விதமான கள அனுபவ பகிர்வுகளையும் சேர்த்தே பெற்றுச் சென்றனர்.

அய்யா நம்மாழ்வார் கூற்றுப்படி விதைகளே பேராயுதமாகவும் விதையிலிருந்து துளிர்கள் துளிர்க்கத் தொடங்கிவிட்டதுமாகவும் தெரிகிறது.

இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ( 22.08.2021 ) அன்று வானகம் ஒருங்கிணைக்கும் ஒரு நாள் விதைகளே பேராயுதம் பயிற்சி முகாம் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் பல ஆண்டுகளாக நேராக விதை உற்பத்தியிலும் விதை பரவலாக்கத்திலும் வேலை செய்யும் நண்பர்கள் பயிற்றுனர்களாக தங்களின் விதை தேர்வு மற்றும் விதை உற்பத்தி பற்றிய நுட்பங்களை பகிர வருகிறார்கள்.

விதைகள் பற்றிய ஆர்வம் உள்ள நண்பர்கள் பயனடைந்து கொள்ளுமாறு வானகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. பயிற்சி நடைபெறும் இடங்கள் மற்றும் முன்பதிவு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி ,

பயிற்சி ஒருங்கிணைப்பு : லெ. ஏங்கல்ஸ் ராஜா , வானகம்.