பாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி

By   04/01/2021

நாள் : 10-01-2021
நேரம் : 10.00 – 5.00
பயிற்றுனர் : பார்வதி நாகராஜன் ( மூலிகை ஆராய்ச்சியாளர் )

● நம்மைச் சுற்றியிருக்கும் தாவரங்களில் மூலிகைத் தன்மை அறிதல்.
● மூலிகை தாவரங்களின் குணம் மற்றும் பயன்பாட்டு முறை அறிதல் .
● நமது வீட்டின் கால்நடைகளுக்கு மான மூலிகை மருத்துவம் செய்யும் முறையை அறிதல்.
● காட்டு மூலிகைகளும் அதன் பயன்பாடுகளும் குறித்த அறிதல்

நாம் நம்மை சுற்றியிருக்கும் தாவரங்களையும் அதன் மூலிகை தன்மைகளையும் நாம் கண்டறிய தவறியதன் விளைவே வெளியிலிருந்து வரும் ரசாயனங்களை மாத்திரைகளை உடலில் செலுத்தி நம் உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை இழந்து வருகிறோம், இந்த அறியாமையிலிருந்து நாம் நம் தலைமுறையினர் விழிப்படையவும் வருங்கால சந்ததியினருக்கு நம் தாவரங்களின் மூலிகைத் தன்மை அதன் குணம் மற்றும் பயன்பாட்டு முறைகளை கற்றுச் சேர்க்கவும் நாமனைவரும் இணைய வேண்டிய காலகட்டம் இதுவே ஆகையால் நாம் நம் பாரம்பரிய மூலிகை அறிவை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் . நம் பாட்டி வைத்தியத்தின் மேன்மை அறிவோம்.