நம்மாழ்வாரின் ஐயாவின் நூல்கள் அறிமுகம்

By   20/07/2020

ஒரு நாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும், கப்பல்கள் மிதப்பதும், விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம்.

ஆனால், உங்களுக்கான உணவை, நீங்கள் உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி அஞ்ச வேண்டியதில்லை.

  • நம்மாழ்வார்.

அதிவேகத்தில் சுழன்று கொண்டிருந்த உலகம், கொரோனாவின் வருகையால் தடைபட்டு, இப்போது தான் மெதுவாக இயங்க தொடங்கி இருக்கிறது.

எவ்வித பாகுபாடுமின்றி, அனைவரின் வாழ்விலும் நிறைய துன்பங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நமது தேவைகளையும் , நுகர்வயும் குறைத்து, நாம் பயணிக்கும் பாதையையும், நமது செயல்பாடுகளையும் மறு பரிசீலனை செய்ய பலரையும் தூண்டி இருக்கிறது.

அதன் விளைவாக, அனைவரின் தேடல்களும் தற்சார்பை நோக்கி நகர்கிறது. அதன் அடிப்படையான இயற்கை வேளாண்மையை கற்றுக் கொள்ளும் உந்துதலை தந்து இருக்கிறது.

நமது கண் முன்னே நிற்கும் அனைத்து கேள்விகளுக்கும் தனது வாழ்வையே விடையாக விட்டுச்சென்ற நம்மாழ்வாரின் எழுத்தும் பேச்சும் தற்சார்புள்ள வாழ்வை நோக்கி நகரும் மக்களுக்கு தேவையான அறிவையும் நம்பிக்கையையும் அளித்து வருகிறது.

நம்மாழ்வாரின் அறிவை மக்கள் அனைவருக்கும், தனது பயிற்சிகளால் தொடர்ச்சியாக கைமாற்றிக் கொடுக்கும் வானகத்தில், ஊரடங்கின் காரணமாக பயிற்சிகள் நடத்த இயலவில்லை.

அதனால், நண்பர்கள் பலர் தொலைபேசி வழியே நம்மாழ்வாரின் புத்தகங்கள் எங்கு கிடைக்குமென கேட்கின்றனர்.

பலரும் நம்மாழ்வாரின் புத்தகங்களை வாசிக்கவும், அவற்றை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

அப்படி ஒரு முயற்சியாக நம்மாழ்வாரின் புத்தக வரிசையை காணொளி மூலம் அறிமுகம் செய்துள்ள நம் நண்பர்கள் அமுதரசன் தடாகம் பதிப்பகம், தாயன்பு சதீஷ், எழுத்தாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட அனைவருக்கும் வானகத்தின் அன்பும் பாராட்டுகளும்.

வானகத்தின் செயற்பாடுகளுக்கும் விரிவாகப் பணிகளுக்கும் தேவையான நிதி பயிற்சிகள் மற்றும் நூல்கள் விற்பனை செய்வதன் மூலமாகத்தான் திரட்டப்படுகிறது. அவ்வப்போது மக்களின் நன்கொடைகளும் கிடைப்பதுண்டு.

கொரோனா நோய் தொற்று காலத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு வாய்பில்லாத நிலையில் கடந்த சில மாதங்களாக வானத்தின் இயக்கத்தை நகர்த்திக் கொண்டிருப்பது புத்தக விற்பனையும், மக்களின் பங்களிப்பும் தான், வானக பதிப்பித்த புத்தகங்கள் வாங்குவதன் மூலம் வானகத்தின் செயற்பாடுகளுக்கு நீங்கள் நேரடியாக உதவு முடியும்.

நேரடி விற்பனை மற்றும் அஞ்சல் மூலம் பெற,

  1. வானகம் – நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர்.
    www.vanagam.org / https://vanagam.page.link/app.
    9445968500, — 9445879292.

சென்னையில் பெற

  1. தடாகம், 112, முதல் தளம், வெங்கடேஸ்வரா காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600041. Ph. 9840070870