வானகத்தில் நம்மாழ்வாரின் 6ம் ஆண்டு நினைவேந்தல் அழைப்பு

By   19/12/2019

வானகத்தில் நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் அழைப்பு

நாள்: 1 ஜனவரி 2020

இடம்: வானகம்,
நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்
சுருமான்பட்டி, கடவூர், கரூர்.

கடந்த முப்பது ஆண்டுகளாக உலகெங்கும் ஒலித்த ஒற்றை வார்த்தை புவிவெப்பமடைதல், கடந்த சில வருடங்களாக அதையும் கடந்து சில வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, அது பல்வேறு நாடுகளில் அரசையும் மக்களையும் உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி இருக்கிறது, அனைத்து மட்டத்தில் உள்ள மக்களையும் அதிகாரிகளையும் நிலைகுலையச் செய்யும் அந்த வார்த்தைகள் ” Climate crisis, Climate catastrophe, Climate emergency, Climate strike”.

பாரபட்சமின்றி எல்லா உயிருக்கும் ஒரு காலக் கெடுவை வைத்தப் பெருமை மனித இனத்தின் நுகர்வுக்கும் அதை மையமாக வைத்து இயங்கும் வணிக சந்தைக்கும் பெரும் பங்குண்டு.

கடந்த சில வருடங்களாகவே நாம் சந்தித்து வரும் சூழலியல், நீராதார மற்றும் விதைப் பன்மைய சிக்கல்களுக்கு தீர்வு தான் என்ன?

அதுவே இந்த நினைவேந்தல் கூட்டத்தின் கருப்பொருளாக திட்டமிட்டுள்ளோம்.

மூன்று ஆளுமைகள் நம்முடன் உரையாடவும், வழிகாட்டவும் வருகிறார்கள்.

தன் வாழ்நாளின் பெரும் பகுதியை 1400 க்கும் மேற்பட்ட விதை நெல்லை காத்து, பன்மடங்காக பெருக்கி, பரவலாக்கி வரும் அருமை தோழர்.

தேபால் தேப்
மரபு விதை நெல் காப்பாளர்
வசுதா பண்ணை
கொல்கத்தா

காந்திய செயற்பாட்டாளர் பல்வேறு வகையில் மக்களுடனும், அரசாங்கத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டு வேளாண்மை, சூழல், காந்திய சிந்தனைகளை ஆழக்காலிட்டு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கும்

ராமசுப்பிரமணியன்
தர்மா இன்ஸ்ட்டியூட்
சென்னை

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் என தண்ணீரை மூச்சாக கொண்டு களத்திலும், அறிவுத்தளத்திலும் தன்னை கரைத்துக் கொண்டு செயலாற்றும்

பேராசியர் ஜனகராஜன்,
சென்னை.

நினைவேந்தல் நாளுக்கு முந்தைய நாளான
31 டிசம்பர் 2019 அன்று ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்கிறோம்.

ராமசுப்பிரமணியன் மற்றும் தேபால் தேப் அவர்களுடன் அமர்வுகள் இருக்கும். சூழலியல் மற்றும் விதைக் காப்பாள நண்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள் என்வதில் ஐயமில்லை, கேள்விகளோடு தயாராகுங்கள்.

கலை நிகழ்ச்சிகள்
நாடகங்கள்
அனுபவப் பகிர்வுகள்

ஆண்டின் முதல் நாள் நம்மாழ்வாரின் நினைவேந்தலன்று ஒருமித்த கருத்தோடு சில கருத்தாக்கத்தை மனதிற் கருக்கொண்டு உறுதியேற்று எப்போதும் போல களத்தில் நிற்போம், மேலும் தெளிந்த கண்ணோட்டத்தில் வினைபுரிவோம்.

தனது விரிந்த கரங்கலோடும், அன்போடும் வானகம் அழைக்கிறது, அனைவரும் ஒன்று கூடுவோம்.

தொடர்புக்கு
9445968500
9445879292