மரபு கட்டுமானம் கற்க வாய்ப்பு

By   14/11/2019

மரபு கட்டுமானம் கற்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு.

வானகத்தில் ஒருங்கிணைந்த கற்றல் கூடம் ஒன்றை சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பற்ற உள்ளூர் கட்டுமான தொழிற்நுட்பங்களை கொண்டு உருவாக்கி வருகிறோம். கட்டிடத்தை வடிவமைத்து தொழில்நுட்பத்தை மக்களுக்கு பரவலாக்கும் செயலில் புவிதம் மீனாட்சி அவர்களின் பங்கு வார்த்தைகளை கடந்தது, அவர்களின் வழிகாட்டுதலோடு சில இளைஞர்கள் வானகத்தில் தன்னார்வளராக தங்கி மரபு கட்டுமான பணிகளை செயல்வழிக் கற்று வருகின்றனர்.

மேலும் கற்க விரும்பும் இளைஞர்களுக்கு மரபு கட்டிட கலையோடு, நஞ்சில்லா வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மானாவரி விவசாயம் போன்றவையும் தினசரி செயல்வழியிலேயே கற்கும் முறையில் திட்டமிட்டுள்ளோம்.

அதிக பட்சம் பனிரெண்டு நபர்கள் வரை தன்னார்வளராக வரலாம், குழுவாக கற்க இந்தச் சிறு எண்ணிக்கை கணக்கில் கொண்டுள்ளோம்,
உணவு தங்குமிடம் வழங்கப்படும்.

கட்டிட வேலையை தொடர்ந்து வானகத்தில் நீண்ட நாட்கள் தங்க விரும்பும் இரண்டு நபர்கள், வானகத்தின் அலுவலக பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம், அவர்களுக்கு மதிப்பூதியமும், உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.

மேலும் விவரங்கள் மற்றும் பதிவு செய்ய கீழே உள்ள எண்ணில் அழைக்கவும்.

+919445968500
+919445879292