மரபு வழி கட்டுமான பயிற்சி

By   18/09/2019

வானக நண்பர்களுக்கு,

தனிமனித விடுதலை தற்சார்பிலிருந்து துவங்குகிறது. தற்சார்பு என்பது தன்னை சுற்றியுள்ள வியாபாரத்தில் இருந்து விடுவித்துக் கொள்வது.

உணவிலும் மருத்துவத்திலும் தன்னை விடுவிக்க தேவையான அறிவையும் அனுபவத்தையும் தொடர்ச்சியாக கைமாற்றி கொடுத்துக் கொண்டிருக்கும் வானகம், மரபுவழி கட்டிடக்கலைஞர் புவிதம் மீனாட்சி அவர்களுடன் இணைந்து வானகத்தில் ஒரு ஒருங்கிணைந்த பயிற்சி வளாகத்தை எழுப்ப துவங்கியுள்ளோம்.

நம் வருமானத்தின் பெரும்பகுதியை நமது வீடுகளுக்காக செலவிடுகிறோம். ஆனால் அந்த வீடுகள் நமக்கும் நம் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த சீர்கேட்டை விளைவிக்கிறது.

நம் அருகில் கிடைக்கும் பொருள்களை கொண்டு, உள்ளூர் தொழில் நுட்பத்தையும், உள்ளூர் உழைப்பையும் பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டுவதை வானகம் கொள்கையாக கொண்டுள்ளது. வானகத்திலுள்ள ஐயா நம்மாழ்வாரின் குடில், நினைவிடம், பயிற்சி குடில் உணவுக்கூடம் உள்ளிட்ட பல கட்டுமானங்கள் இந்த உத்திகளை பயன்படுத்தி கட்டப்பட்டது.

நிபுணத்துவம் வாய்ந்த கட்டிட வடிவமைப்பாளர்களின்
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும், அழகியலோடு கூடிய வடிவமைப்பையும் இணைத்து கூடுமானவரை இயற்கை வளங்களை சேதப்படுத்தாமல் பயிற்சி வளாகம் உருவாகத் தொடங்கியுள்ளது.

இதில் விருப்பமுள்ள தன்னார்வலர்களும், மரபு சார்ந்த கட்டிடப் பணிகளில் ஆர்வம் உள்ளோரும், கட்டிட பொறியியல் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்போரும் முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ இப்பணியில் பங்குபெற்று கற்றுக் கொள்ள வானகம் உங்களை அன்போடு அழைக்கிறது.

இதற்கு கட்டணம் ஏதுமில்லை. உணவும் தங்குமிடமும் வழங்கப்படும்.

தொடர்புக்கு,
9445968500, 9445879292.