புவிதம் பயிற்சி – ஆகஸ்ட் 16 2019

By   12/08/2019

வானகமும், தர்மபுரியில் உள்ள புவிதம் பள்ளி. மற்றும் சமன்வயா சென்னை,கர்நாடகா மாநிலம் மேல்கோட்டை ஜனபதா சேவா டிரஸ்ட், (இயற்கை பருத்தி) காஸ்கேட், மற்றும் தன்னாட்சி நிறுவனம்.ஆகியவை இணைந்து முழுமையான தற்சார்பு வாழ்வியல் பயிற்சியை வழங்குவது என்ற முன்னெடுப்பை திட்டமிட்டு உள்ளோம்.

அதன் விளைவாக மேற்கண்ட ஆறு நிறுவனங்களும் இணைந்து எதிர்கால சந்ததிகளுக்கு முழுமையான தற்சார்பு வாழ்வியல்லை நாடு முவழுதும் கொண்டு செல்ல கிராமப்புறங்களை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்விபெற்றுள்ள 20 (பெண்கள் மற்றும் ஆண்கள்) இளைஞர்களுக்கு பதினோரு மாதங்கள் முழுமையான இயற்கை வாழ்வியல், தற்சார்பு பயிற்சி வழங்குவது என முடிவு செய்திருக்கிறோம்

இப்பயிற்சி ஆகஸ்ட் 16ம் தேதி் அன்று நிலைத்த வாழுமைக்கான நிறுவனம்(SLI)ஆரோவில்லில் தொடங்கும்.
இப்பயிற்சி முறையாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இடையிடையே தற்சார்பு வாழ்வின் முக்கிய கூறுகளை அறிந்து கொள்வதற்கான பயணமும் உள்ளடங்கும். இந்த 11மாதப் பயிற்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். இந்தப் பயிற்சியில் அடுத்த தலைமுறைக்கான தற்சார்பு வாழ்வியல் பயிற்றுனர்களை உருவாக்குவதே நோக்கம். பயிற்சிக்குப் பின்னர் இவர்களை தற்சார்பு வாழ்வியலை கற்றுதரும் புவிதம் பள்ளி,அல்லது வானகம் போன்ற பயிற்சி மையங்களை உருவாக்க வல்லமையுள்ளவர்களாக மாற்றுவதே இலக்கு.

இந்த 11 மாத பயிற்சியில் பங்கெடுக்க விரும்புவோர்.
கீழ்காணும் தொடர்பு எண்ணிலோ முகவரி இதோ தொடர்பு கொள்ளலாம்.

Meenakshi.
9384897495.
Register. puvitham.in
e-mail. puvitham@gmail.com
https://puvidham.in/back-to-basics/

நன்றி
வானகம்