குழந்தைகள் கொண்டாட்டம் – 22-28 ஏப்ரல் 2019

By   17/04/2019

வானகத்தில் குழந்தைகள் கொண்டாட்டம் 


வானகத்தில் குழந்தைகளும், குழந்தைகளால் வானக பூமியும் மகிழ்ச்சி அடைவது ஒத்திசைவான நிகழ்வாகவே அமைவது வழக்கம், குழந்தைகளின் பாதங்கள் பட்டதும் குளிர்ந்து போவது மண்ணின் தன்மை போல, தயாராவோம் குதூகலமான ஒரு கொண்டாட்டத்திற்கு. 


ஆண்டு முழுவதும் அடுத்தவர்கள் கனவை நிஜமாக்க தன் குழந்தைமையை இழக்கும் பிஞ்சுகள், தங்கள் இயல்பில் சில நாட்களாவது வாழ வழிவகை செய்ய முனைகிறது வானகம், வாழ்வின் பின் பகுதிகளில் நினைத்து  மகிழ்ச்சியுற நாம் மனதில் வைத்திருப்பது சிறுவயதில் ஏற்பட்ட நல்ல நினைவுகள் மட்டும் தானே, அதனால் தானே நாம் அனைவரும் மீண்டும் குழந்தையாகிவிட மாட்டோமா என்கிற ஏக்கம் கொள்கிறோம், ஆண்டு தோறும் பந்தயக் குதிரைகளாக ஓடி ஓடிச் சலித்துப் போன அந்த பிஞ்சு கால்களுக்கு ஓய்வு வேண்டாமா. 


சூரியனையும், நிலவையும், நட்சத்திரங்களையும் பார்த்து ஆண்டுகள் பலவாகின என்று பாதிக்கும் மேற்பட்ட பெரியவர்களே சொல்லும் அளவிற்கு  வாழ்க்கையின் ஓட்டம் திசை மாறி இருக்கிறது, குழந்தைகளுக்குப் பசி கூட மறந்து போனது, எதற்காக இந்த ஓட்டம், யாருக்காக இத்தனை இழப்புகள், சற்றே இளைப்பாறட்டும், காலையில் குருவியின் கீச்சிடும் ஒலியைக் கேட்கட்டும், சூரியனின் வெம்மையில் வேர்வையோடு ஆடிப் பாடி திரியட்டும், களிமண்ணில் ரேகைகள் பதியட்டும். 


குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும், அதைப் பார்த்து நாமும் இலகுவாகுவோம், வானகத்தில் குழந்தைகள் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். 
அனுப்பி வையுங்கள் அனைவரும் கூடி மகிழ்வோடு இருப்பார்கள்.


நாள் : 22-04-2019 திங்கள் முதல் 28-04-2019 ஞாயிறு வரை
இடம் : வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர்.
பயிற்சி பங்களிப்பு : 2500/-

வங்கி விவரம்

Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu


தொடர்புக்கு

9566667708
9445879292

பெற்றோர்கள் உடன் தங்க அனுமதியில்லை, 21-04-2019 ஞாயிறு அன்றே குழந்தைகளைக் கொண்டு வந்து விடலாம். 28-04-2019 ஞாயிறு மாலை 4 மணிக்குப் பயிற்சி நிறைவு பெரும்.