நம்மாழ்வாரின் 81 வது பிறந்தநாள் விழா

By   22/03/2019

நம்மாழ்வாரின் 81 வது பிறந்தநாள் விழா
மரபு விதை திருவிழா அழைப்பு.

நாள்
06-04-2019
சனிக்கிழமை
காலை 9 மணி முதல்

இடம்
வானகம்
நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்
சுருமான்பட்டி, கடவூர், கரூர்.

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

நஞ்சில்லா உணவையும், ஆரோக்கியாமன சூழலையும் அனைத்துயிர்களுக்கு உறுதி செய்ய வேண்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே, அவர் விதைத்துச் சென்ற விதைகளை பல்கிப் பெருகி தினசரி பேசு பொருளாக உணவும், சூழலியலும் மாறி நிற்கிறது.

உணவு உற்பத்தியில், அனைவருக்கும் உணவு உத்திரவாதம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் மானாவாரி உழவர்களை ஒருபடி மேலே உயர்த்துவது தான் தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார், அதன் தொடர்ச்சியாகத் தான் வானகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இருந்து வருகிறது, இப்படி சூழலியல், கல்வி, மருத்துவம் என எண்ணற்ற மாற்றங்களையும், முன்னோர்கள் உழைப்பின் அறுவடையும் நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம், அதை நினைவு கூறும் விதமாக தான் வருடத்தில் இரண்டு முறை வானகத்தில் கூடுகிறோம், வரும் ஏப்ரல் ஆறாம் தேதியும் கூட இருக்கிறோம்.

அந்த நிறைவான நாளில், உழவு, சூழலியல், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் இந்தச் சமூகம் பயனுற வாழும் நன் நெஞ்சங்களை அறிமுகம் செய்து பாராட்டியும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

நம்மாழ்வாரின் பிறந்த நாளை மரபு விதைத்திருவிழாகவும் கொண்டாடி வருகிறோம், மரபு விதைக் காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் பாராட்டும் பொருட்டும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது, இந்த ஆண்டும் வழக்கம் போல மரபு இசை, மரபு கலைகள் மற்றும் நாடகத்தோடு அனைவரும் கூடி உறவாடுவோம், உரையாடுவோம்.

மக்கள் பங்களிப்போடு கூடிய நம்மாழ்வார் விருது.

ஆண்டு தோறும் உழவு, சூழல், மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக செயலாற்றும் நண்பர்களுக்கு நம்மாழ்வார் விருதும், மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு தொகையும் வழங்குவது சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது, இந்த ஆண்டும் மக்களின் பங்களிப்போடு விருதுகள் வழங்க இருக்கிறோம்.

தாங்கள் பங்களிக்க விரும்பும் தொகையை, இந்த வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த தகவலை எங்களுக்கு WhatsApp / Email மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள்.

Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu

+919994277505 – +919488055546
info@vanagam.org

அனைவரையும் அன்போடு வானகம் அழைத்து மகிழ்கிறது.

நன்றி
வானகம்